twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலையிழப்பு.. கோடிக் கணக்கில் நஷ்டம்.. லாக்டவுனால் அதள பாதாளத்திற்கு சென்ற மல்டி பிளக்ஸ்கள்

    |

    சென்னை: லாக்டவுன் தளர்வு காரணமாக ஹோட்டல்கள், மதுபான கடைகள், ஐடி துறை, சினிமா போஸ்ட் புரொடக்ஷன் என பல்வேறு தொழில் துறைகள் மீண்டும் இயங்கி வரும் நிலையில், தியேட்டர்களின் நிலை அப்படியே கவலைக் கிடமாகவே இருக்கிறது.

    மிகப்பெரிய மல்டி பிளக்ஸ் திரை அரங்குகளான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஏகப்பட்ட கோடிகளை மார்ச் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இழந்துள்ளன.

    கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட பல தொழில்களில் தியேட்டர் தொழிலும் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளது மறுக்க முடியாத ஒன்று.

    இழுத்து மூடியாச்சு

    இழுத்து மூடியாச்சு

    சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் கேளிக்கை விடுதிகளான மால்கள், தியேட்டர்கள், பீச், பூங்காக்கள் மூடப்பட்டன. இந்தியாவிலும், கடந்த மார்ச் மத்தியில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தியேட்டர்கள் ஷட்டர் இழுத்து சாத்தப்பட்டன.

    அமோக வசூல்

    அமோக வசூல்

    பிவிஆர் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு கூடுதலாக உருவாக்கிய 87 மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை சேர்த்து மொத்தம் 847 ஸ்க்ரீன்களை 71 நகரங்களில் கொண்டு தியேட்டர் பிசினஸில் கொடிகட்டிப் பறந்தது. பாப் கார்ன் தொடங்கி, தியேட்டர் டிக்கெட் விலை வரை என அமோக வசூல் குவித்து வந்த அந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறது.

    27 சதவீதம் இழப்பு

    27 சதவீதம் இழப்பு

    கிட்டத்தட்ட 100 மில்லியன் தியேட்டர் ரசிகர்களை கொண்டிருந்த பிவிஆர் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து போடப்பட்ட லாக்டவுன் காரணமாக இந்த காலாண்டில் 480 மில்லியன் ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்திருப்பதாகவும், இது அதன் வருமானத்தில் 27 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐநாக்ஸ் நிறுவனம் 20 மில்லியன் வரை இழப்பை சந்தித்து இருக்கிறது.

    வேலை நிறுத்தம்

    வேலை நிறுத்தம்

    தியேட்டரில் வேலை செய்து வந்த பலரையும் இதன் காரணமாக வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட தியேட்டர் நிறுவனங்கள். அடுத்தடுத்து இந்தியாவில் லாக்டவுன் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வரை தியேட்டர்கள் திறக்கப்படாத நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் மற்றும் தியேட்டர் துறை முற்றிலும் முடங்கும் நிலையும் உருவாகி இருக்கிறது.

    நேரடி ஆன்லைன் ரிலீஸ்

    நேரடி ஆன்லைன் ரிலீஸ்

    ஏற்கனவே எடுக்கப்பட்ட புதிய திரைப்படங்களும் தியேட்டர் ரிலீஸ் தாமதமாகும் நிலையை அறிந்துக் கொண்டு நேரடியாக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜி5, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் தங்களின் படங்களை வெளியிட்டும் வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.

    English summary
    Multiplex operators such as, PVR and INOX faced a huge business loss in the last quarter. They layoff their staffs and waiting for the permission to open the theaters very soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X