'அவரை நான் ஏமாற்றினேனா? அனைத்தும் பொய்..' கார் டிரைவர் மீது பிரபல கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்!
ஐதராபாத்: தான் ஏமாற்றிவிட்டதாக சொன்ன கார் டிரைவர் மீது, நடிகை முமைத் கான் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் முமைத் கான், .
தமிழில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். முன்னணி ஹீரோ படங்களிலும் நடித்துள்ளார்.

சிக்கிமுக்கி நெருப்பே
கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே, சிக்கி முக்கி நெருப்பே, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கார் டிரைவர்
முமைத் கான் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனக்குத் தர வேண்டிய 15000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் டிரைவர் ராகவா ராஜூ என்பவர் முமைத்கான் மீது புகார் கூறினார். இது பரபரப்பானது. முமைத் கான் கோவா செல்ல வேண்டும் என்று என் காரை புக் செய்தார். அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்றார். சென்றேன்.

வாடகையை தரவில்லை
பின்னர் மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கினார். ஆனால், தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ஆயிரம் ரூபாயைத் தரவில்லை என்று கூறி இருந்தார். ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.

டிரைவர் மீது புகார்
தன்னைப் போல் மற்றொரு டிரைவர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்வதாகவும் ராஜூ கூறி இருந்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த நடிகை முமைத் கான், ஐதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா போலீஸ் ஸ்டேஷனில், அந்த கார் டிரைவர் மீது நேற்று புகார் கொடுத்தார்.

மறுத்தார் முமைத்கான்
அதில் டிரைவர் ராகவா ராஜூ கூறிய புகாரை மறுத்துள்ள நடிகை முமைத் கான், அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து பணத்தையும் செலுத்தி விட்டதாகவும் இருந்தும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.

இருவரிடமும் விசாரணை
இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் ரெட்டி கூறும்போது, இதுபற்றி இருவரிடமும் விசாரிக்க இருக்கிறோம், அப்போதுதான் உண்மை என்ன என்று தெரியவரும் என்றார். இதற்கிடையே கார் டிரைவர் ராஜூ, தனது சங்கத்தை நாடியுள்ளார். இந்த பிரச்னை ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











