For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஜித் கோபத்தை கண்டு அரண்டு போன மும்பை நடிகை..ஓவர் ஆட்டம் ஆடியதால் பாதியில் அனுப்பி வைத்த சம்பவம்

  |

  நடிகர் அஜித்குமார் அனைவரையும் மதிக்கக் கூடியவர் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் பழகக்கூடியவர் ஆனால் அவரையே கோபப்படுத்தி விட்டார் ஒரு நடிகை.

  அஜித் நடித்த படப்பிடிப்பில் பாடல் காட்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை அஜித்தை தொடர்ந்து வெறுப்பேற்ற ஒரு கட்டத்தில் அவரை வெளியே அனுப்பிய நிகழ்ச்சி நடந்துள்ளது.

  ஓவர் ஆட்டம் போட்ட நடிகையை சூட்டிங் விட்டு அனுப்பி அவர் இல்லாமல் மீதிக்காட்சியை எடுத்த தகவலை மூத்த சினிமா செய்தியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

  வெளியானது டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர்.. மாஸ் காட்டும் விஜய் சேதுபதி! வெளியானது டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர்.. மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!

  அமராவதியில் கால் பதித்த அஜித்

  அமராவதியில் கால் பதித்த அஜித்

  நடிகர் அஜித் சாதாரண நிலையில் இருந்து திரைப்படத்தில் கால் பதித்து படிப்படியாக முன்னேறியவர். பைக் மெக்கானிக்காக வாழ்க்கை தொடங்கியவர் பின்னர் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சின்ன சின்ன ரோல்களில் திரைப்படத்தில் நடிக்க அறிமுகமாகி பின்பு அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.பவித்ரா, ஆசை படங்கள் மூலம் பிரபலமானார். கமல் ரஜினிக்கு அடுத்து அஜித் விஜய் என்றானது. தமிழ் திரை உலகில் அஜித்தை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது மிக கடினம். மிக, மிக யதார்த்தமான மனிதர் என்று சினிமா உலகில் அனைவரும் கூறுவார்கள்.

  பன்முக திறமை கொண்ட அஜித்

  பன்முக திறமை கொண்ட அஜித்

  யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் அஜித் மிக உறுதியாக இருப்பார். அதேபோன்று பெரியவர், சிறியவர், பெரிய நடிகர், சின்ன நடிகர் என்கிற பாகுபாடு இல்லாமல் செட்டில் அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடியவர். சினிமா புகழ் எனும் கர்வத்தை தனது மண்டைக்குள் என்றைக்கும் ஏற்றிக் கொள்ளாதவர் அஜித். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் சினிமாவைத் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், ரைஃபிள் ஷூட்டிங், ட்ரோன் கேமரா என பல விஷயங்களில் அஜித் ஈடுபடுவதை பார்க்க முடியும். அதிலும் ரைஃப்பில் ஷூட்டிங்கில் சாதாரண காவலர்கள் உடன் நின்று கொண்டு போட்டியில் அவர் ஈடுபட்டதை காண முடிந்தது.

  கால்டாக்சியில் கமிஷனர் அலுவலகம் வந்த அஜித்

  கால்டாக்சியில் கமிஷனர் அலுவலகம் வந்த அஜித்

  ஒருமுறை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு செல்லவேண்டியவர் தவறுதலாக வேப்பேரி கமிஷனர் ஆபீசுக்கு தவறுதலாக வந்து விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் வந்தது சாதாரண கால் டாக்ஸியில். பின்னர் அங்கிருந்த போலீசார் அவருக்கு எழும்பூர் கமிஷனர் பழைய கமிஷனர் அலுவலக முகவரியை கொடுத்து அவரிடம் பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். யாரிடமும் முகம் சுளிக்காமல் எல்லோருக்கும் ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு அஜித் புறப்பட்டு சென்றார்.

  ஆன்லைன் உணவை தானே ஆர்டர் செய்த அஜித்..அலறி குதித்த ஓட்டல் ஊழியர்

  ஆன்லைன் உணவை தானே ஆர்டர் செய்த அஜித்..அலறி குதித்த ஓட்டல் ஊழியர்

  இதே போல் ஒரு தடவை தனக்கான உணவை தானே ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஆன்லைனில் இருப்பவர் உணவுக்கான விவரங்களை கேட்டுவிட்டு உங்கள் பெயர் எனக்கேட்க அஜித்குமார் என்று சொல்ல, அஜித் குமாரின் குரலை வைத்து சார் நீங்கள் நடிகர் அஜித்குமார் தானே என்று அவர் கேட்க அஜித்குமார் ஆமாம் என்று சொல்ல அவர் போனை வைத்துவிட்டு குதி குதி என்று குதித்து மற்றவர்களுடன் தகவலைச் சொல்ல ஒவ்வொருத்தரும் அவரிடம் வந்து பேசிய பேசியதும், அதற்கு பொறுமையாக பதில் அளித்ததும் நடந்தது.

  ரசிகர்கள், பொதுமக்களை பெரிதும் மதிக்கும் அஜித்

  ரசிகர்கள், பொதுமக்களை பெரிதும் மதிக்கும் அஜித்

  இதே போன்ற அனுபவங்கள் பலருக்கும் உண்டு. வெளியில் எங்காவது சென்றால் யாராவது செல்பி எடுத்தாலோ, போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பினாலோ தயக்கம் இல்லாமல் ஒத்துழைப்பார். விமான பயணங்கள் மற்ற பயணங்களின் போது எதிரில் வரும் பயணிகள், பணிப்பெண்கள், காவலர்கள் வணக்கம் செலுத்தினால் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது, அவர்கள் முகங்களை பார்த்து சிரித்தபடி செல்வது என்பதை அஜித் எப்போதும் வாடிக்கையாக வைத்திருப்பார். பல பிரபலமான நடிகர்கள் இதை கடைபிடிக்க மாட்டார்கள்.

  அஜித்தையே கோபப்பட வைத்த நடிகை

  அஜித்தையே கோபப்பட வைத்த நடிகை

  அப்படிப்பட்ட அஜித் வாழ்வில், அவரையே கோபப்பட வைத்துவிட்டார் ஒரு நடிகை. இதுகுறித்து மூத்த சினிமா செய்தியாளர் தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அதை அவர் வார்த்தையிலேயே பதிவு செய்வோம், "அஜித்தையே மும்பை நடிகை ஒருவர் கோபப்பட வைத்து விட்டார். 2005 ஆம் ஆண்டு இயக்குநர் சரண் அஜித்தை வைத்து அட்டகாசம் என்கிற படத்தை எடுத்தார். அதில் தீபாவளி தல தீபாவளி பாடல் குஷால் தாஸ் கார்டனில் எடுக்கப்பட்டது. இதில் மும்பையிலிருந்து நடிகை ஐட்டம் டான்ஸ் ஆட வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் யார் என்றால் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' பாடலுக்கு ஆடி புகழ் பெற்ற நடிகை ரச்சிகா.

  செட்டில் அலப்பறை செய்த மும்பை நடிகை

  செட்டில் அலப்பறை செய்த மும்பை நடிகை

  அவர் அன்று செட்டில் ஏகப்பட்ட அலப்பறை செய்துக்கொண்டிருந்தார். அஜித்துடன் பாடலுக்கு நடனம் ஆடி முடித்தவுடன் அஜித் எதிரில் சேர் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததைப்பார்த்து உதவி இயக்குநர்கள் பதறி அடித்து ஓடிவர அஜித் கண் ஜாடைக்காட்டி எதுவும் சொல்லக்கூடாது என்று தடுத்து விட்டார். அவர் மும்பை நடிகை, அவரும் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று கூறிவிட்டார். பின்னர் அடுத்த சரணத்திற்கு ஆடும்போது ஆடி முடித்தவுடன் என்ன பேக்கப் செய்திடலாமா என பெரிய நடிகை போல் கேட்க அஜித் கடுப்பாகியுள்ளார்.

  பந்தா காட்டிய நடிகையை பாதியில் அனுப்பிய அஜித்

  பந்தா காட்டிய நடிகையை பாதியில் அனுப்பிய அஜித்

  என் ஷூட்டிங்கில் நீங்கள் பேக்கப் சொல்கிறீர்களா? இயக்குநரை கூப்பிடு இவங்கள அனுப்பச் சொல்லிடு என கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் பாடலில் இடம்பெறவில்லை. அந்தப்பாடலில் முதல் இரண்டு சரணத்தில் தான் அவர் வருவார், அடுத்து அவர் இல்லாமலே அஜித் தனியாக ஆடுவார். அப்படி அஜித்தையே கோபப்படும் வகையில் அந்த நடிகை அவ்வளவு பந்தா காட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.

  English summary
  Mumbai actress who got fear after seeing Ajith's anger..She was sent off the shoot due to an OverReacting.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X