மோசடி வழக்கு.. 3 மாசம் கம்பி எண்ணப் போகும் ராம் கோபால் வர்மா.. தேசிய விருது இயக்குநருக்கா இந்த கதி?
ஹைதராபாத்: அமிதாப் பச்சன், சூர்யா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படங்களை இந்தியிலும் தெலுங்கிலும் கொடுத்தவர் தான் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர் எடுத்த ராங் டர்ன அவருக்கு சினிமாவில் அவரை சர்ச்சை இயக்குநர் என்கிற பெயரையும் ஆபாச பட இயக்குநர் என்கிற அவமானத்தையும் பெற்றுத் தந்தது.
நிர்வாணமாக நடிகைகளை நடிக்க வைத்து படுமோசமான படங்களை எடுத்தும் நடிகைகளின் கால்களை நக்கி விளையாடும் வீடியோக்களை வெளியிட்டும் சினிமா பிரபலங்கள் குறித்து மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டும் சர்ச்சையை கிளப்பிய ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக நீதிமன்றம் தற்போது அதிரடியாக 3 மாத சிறைத்தண்டனையை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிகர்களும் இயக்குநர்களும் சினிமா பிரபலங்களும் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ராம் கோபால் வர்மா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது டோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய விருது இயக்குநர்: 2000ம் ஆண்டு இந்தியில் வெளியான ஸ்கூல் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் தான் ராம் கோபால் வர்மா. அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை எடுத்து ஹிட் கொடுத்த அவர் சூர்யா நடித்த ரக்த சரித்திரம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். ஆனால், திடீரென டிராக் மாறிப்போன அவர் நேக்கட், காட் செக்ஸ் அண்ட் ட்ரூத், கிளைமேக்ஸ் என பிட்டு படங்களை எடுத்து வெளியிட ஆரம்பித்துவிட்டார்.
3 மாதம் சிறை: செக் மோசடி வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ராம் கோபால் வர்மா அலைக்கழித்து வந்த நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஒய்.பி. புஜாரி 3 மாதங்கள் சிறையில் ராம் கோபால் வர்மாவை அடைக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 3.72 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பிணையில் வெளிவர முடியாத வழக்காக இது அமைந்துள்ள நிலையில், ராம் கோபால் வர்மாவை போலீஸார் கைது செய்ய நேரிடும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











