காமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்

மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கடந்த ஜூலை 19ம் தேதி ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷெர்லின் சோப்ராவை மும்பை போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

அமெரிக்காவின் பிரபல பிளேபாய் மேகஸினுக்கு முழு நிர்வாணமாக முதன் முதலாக போஸ் கொடுத்த இந்திய பெண் என்கிற பெயர் எடுத்தவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட், டோலிவுட் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி கன்னியாகவும் நடித்துள்ளார்.

யூனிவர்சிட்டி படத்தில்

யூனிவர்சிட்டி படத்தில்

நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான யுனிவர்சிட்டி படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு மோனல் சோப்ரா எனும் பெயரில் நடனமாடி உள்ளார் ஷெர்லின் சோப்ரா. எ ஃபிலிம் பை அரவிந்த் எனும் தெலுங்கு படத்திலும் இவர் நடித்துள்ளார். சில ஆங்கில படங்களிலும் இவர் படு ஆபாசமாக நடித்துள்ளார்.

காமசூத்ரா 3டி

காமசூத்ரா 3டி

பீப்பர் எனும் ஆங்கில படத்தைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு உருவான காமசூத்ரா 3டி எனும் ஆங்கில படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருந்தார் ஷெர்லின் சோப்ரா. ஆனால், அந்த படம் இன்னமும் முழுமை பெற்று வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார் ஷெர்லின் சோப்ரா.

போலீஸ் சம்மன்

போலீஸ் சம்மன்

போதைப் பொருள் விவகாரத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ள ஆபாச பட விவகாரம் தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் மும்பை குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மும்பை போலீசார் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

முன் ஜாமின்

முன் ஜாமின்

மும்பை போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கவும் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படாமல் தப்பிக்கவும் முன் ஜாமின் கோரி மும்பை நீதிமன்றத்தை நடிகை ஷெர்லின் சோப்ரா அணுகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜ் குந்த்ரா வழக்கு விசாரணையில் ஷெர்லின் சோப்ராவை போல மேலும் சில கவர்ச்சி நடிகைகள் சிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூனம் பாண்டேவுக்கு எச்சரிக்கை

பூனம் பாண்டேவுக்கு எச்சரிக்கை

இதுதான் நேரம் என ராஜ் குந்த்ரா மீது ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளை சர்ச்சை நடிகை பூனம் பாண்டே அடுக்கிய நிலையில், அவருக்கு எதிராகவும் ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவை ஆதரித்தும் நடிகை ஷெர்லின் சோப்ரா வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து தான் இந்த விசாரணைக்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X