மும்பை போலீஸை நம்ப முடியாது.. அந்த நடிகர் மீது கொடுத்த வழக்கையே மூடிட்டாங்களே..பிரபல நடிகை புகார்!

By

மும்பை: சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசார் நியாயமான, நேர்மையான விசாரணையை மேற்கொள்வார்கள் என்று நம்பவில்லை என பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

தமிழில் விஷால் ஜோடியாக, தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஶ்ரீ தத்தா.

இந்தியில் சில படங்களில் நடித்துள்ள தனுஶ்ரீ, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிக்கவில்லை. ஆன்மீகம் பக்கம் சென்றார். தலையை மொட்டை அடித்து ஆளே மாறி இருந்தார்.

நடிகர் நானா படேகர்

நடிகர் நானா படேகர்

சிறிது காலம் அமைதியாக இருந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன், மீ டு புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் மிரட்டப்பட்டதாகவும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த மீ டூ புகார், பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சாட்சியங்கள் இல்லை

சாட்சியங்கள் இல்லை

நானா படேகர், தமிழில் பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்தவர். தனுஶ்ரீயின் புகாரை அடுத்து இந்தி நடிகர், நடிகைகள் சிலர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், தேவையான சாட்சியங்கள் இல்லாததால் விசாரணையை தொடர முடியவில்லை எனக் கூறி முடித்துவிட்டனர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் தந்தை

சுஷாந்த் சிங் தந்தை

இந்நிலையில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா போலீஸ் ஸ்டேஷனில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். இதையடுத்து இந்தப் பிரச்னை மேலும் பரபரப்பாகி இருக்கிறது. இதற்கிடையே மும்பை போலீசார் நியாயமாக நடந்துகொள்வார்கள் என்பதை நம்ப முடியாது என்று கூறியுள்ளார் நடிகை தனுஶ்ரீ தத்தா. தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், இந்த விவகாரம் பற்றி கூறியிருப்பதாவது:

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

மும்பை போலீசாரை நம்ப முடியாது. அவர்கள் நியாயமான, சார்பில்லாத விசாரணையை மேற்கொள்வார்கள் என்பதை நம்ப முடியவில்லை. இதுபோன்ற வழக்குகளை விரைவில் முடித்து விடுவதிலேயே அவர்கள் குறியாக இருப்பார்கள். குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் அவர்கள். தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று மக்களை அவர்கள் அழைப்பது, சென்டிமென்ட்டுக்காக மட்டுமே.

சிறையில் இருந்திருப்பார்கள்

சிறையில் இருந்திருப்பார்கள்

ஏனென்றால் இந்த விவகாரம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதால். என் விவகாரத்தில் கூட, ஆதாரங்களை கொடுத்தும் அவர்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டனர். நடிகர் நானாவின் ஆதரவாளர்களால் சாட்சிகள் மிரட்டப்பட்டார்கள். மும்பை காவல்துறையிடம் நான் கொடுத்த ஆதாரங்களை, அமெரிக்காவில் கொடுத்திருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இப்போது சிறையில் இருந்திருப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X