லாக்டவுன் நேரத்தில் காதலருடன் சுற்றிய பிரபல நடிகை.. அலேக்காக மடக்கிய போலீஸ்.. வழக்கும் பதிவு!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப் மற்றும அவரது ரூமர் காதலியும் நடிகையுமான திஷா பதானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பை நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூமர் காதலி
பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப் பாகி சீரிஸ் படங்கள் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். அவரும் இளம் நடிகை திஷா பதானியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பாலிவுட் முழுக்க பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பல முறை வெளியாகி உள்ளன.

கடும் கட்டுப்பாடு
மும்பை மாநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வெளியே தேவை இன்றி சுற்றினால் போலீசார் கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர்கள் மீது எஃப்.ஐ.ஆர்
இந்நிலையில், பந்தரா பகுதியில் மதியம் 2 மணிக்கு மேல் டைகர் ஷெராஃப் மற்றும் திஷா பதானி வெளியே சுற்றித் திரிவதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இருவரும் எந்தவொரு முறையான காரணமும் சொல்லாத நிலையில், சினிமா பிரபலங்கள் என்றும் பாராமல் மும்பை போலீசார் அதிரடியாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் ஸ்டைலில் எச்சரிக்கை
மேலும், மும்பை போலீசாரின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் டைகர் ஷெராஃப் நடித்த வார் மற்றும் ஹீரோபன்டி மற்றும் திஷா பதானியின் மலங் படங்களை மறைமுகமாக குறிப்பிட்டு இருவர் மீதும் 188, 34 என இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சூடேற்றும் பிகினி
இந்த பிரச்சனையை திசை திருப்பும் விதமாக நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பவோ எடுத்த ஹாட் பிகினி புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ஒரு மில்லியன் லைக்குகளை குவித்துள்ளார். டைகர் ஷெராஃப் மற்றும் திஷா பதானியின் ரசிகர்கள் மும்பை காவலர்கள் செய்தது சரியல்ல என்று இருவருக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர். இன்னொரு புறம் தரமான சம்பவம் என பாலிவுட் ரசிகர்கள் மும்பை போலீசாரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











