நடிகை கங்கனா மற்றும் ரங்கோலிக்கு 3 வது முறையாக போலீஸ் சம்மன்.. இந்த முறையாவது ஆஜராவார்களா?

By

மும்பை: நடிகை கங்கனா மற்றும் அவர் சகோதரிக்கு பாந்த்ரா போலீசார் 3 வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் மாதம் தற்கிலை செய்துகொண்டார்.

இதையடுத்து அடுத்து, நடிகை கங்கனா இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

கடும் குற்றச்சாட்டு

கடும் குற்றச்சாட்டு

பாலிவுட் பிரபலங்கள், கரண் ஜோஹர், மகேஷ் பட் உட்பட பலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பேட்டிகளிலும் கடுமையான புகார்களை கூறி வரும் அவர், மும்பையை, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரு மதத்தினர்

இரு மதத்தினர்

வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கனாவும் அவர் சகோதரி ரங்கோலியும் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து
தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மனம் காயம்

மனம் காயம்

இதுகுறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் முனவர் அலி சயீத் என்பவர், பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கங்கனா மற்றும் அவர் சகோதரி ரங்கோலி தெரிவித்த கருத்துகள் அவரது மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பல கலைஞரின் மனதையும் காயப்படுத்தியதாகக் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் முனவர் அலி சயீத் என்பவர், பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கங்கனா மற்றும் அவர் சகோதரி ரங்கோலி தெரிவித்த கருத்துகள் அவரது மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பல கலைஞரின் மனதையும் காயப்படுத்தியதாகக் தெரிவித்திருந்தார்.

சம்மன் அனுப்பியும்

சம்மன் அனுப்பியும்

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட் நடிகை கங்கனா மற்றும் அவர் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

ஆஜராக வேண்டும்

ஆஜராக வேண்டும்

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்த்ரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி கங்கனா வருகிற 23 ஆம் தேதியும், அவர் சகோதரி 24 ஆம் தேதியும் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X