ஓடிடி தளத்தில் வெளியானது "மம்மி சேவ் மீ" .. ஹார்ட் பீட் பத்திரம்!

சென்னை : மிரட்டும் திகில் காட்சிகளுடன் உருவான "மம்மி சேவ் மீ" திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

Recommended Video

Celebrity Cooking • Keerthy Suresh, Sameera Reddy, Priyanka Deshpande

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஜேஎஸ்கே பிரைம் மீடியா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

நடிகை பிரியங்கா மற்றும் பேபி யுவினா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திகில் நிறைந்த ஹாரர் திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

உண்மை சம்பவங்களை

உண்மை சம்பவங்களை

சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஹாரர் திரைப்படங்களுக்கான வரவேற்பு மக்களிடையே அமோகமாக இருந்து வருகிறது. அவ்வாறு பல்வேறு கதைகளை கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் இன்று வரை அனைவரையும் மிரட்டி வரும் நிலையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "மம்மி சேவ் மீ" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இப்பொழுது வெளியாகி உள்ளது.

மாதங்களுக்கு முன்பு வெளியாகி

மாதங்களுக்கு முன்பு வெளியாகி

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா, பேபி யுவினா மற்றும் கோலிசோடா மதுசூதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மிரட்டியதோடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஜேஎஸ்கே நிறுவனம்

ஜேஎஸ்கே நிறுவனம்

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜேஎஸ்கே நிறுவனம் தனது சொந்த ஓடிடி தளமான ஜேஎஸ்கே பிரைம் மீடியா என்ற ஓடிடி தளத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

கொடூரமான முறையில்

கொடூரமான முறையில்

ஆள் இல்லாத தனி தீவுக்குள் ஒற்றை வீடு, அதில் புதிதாக குடிபெயரும் குடும்பத்தில் நடக்கும் பல்வேறு திகில் சம்பவங்கள் பார்ப்போர் அனைவரின் இதயங்களின் துடிப்பையும் பதம் பார்த்து விடுகிறது. இந்த திரைப்படம் துவங்கும் போதே வீட்டில் இருக்கும் பேயை கண்டறிய வரும் ஒருவர், அந்த பேயாலேயே கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்.

"மம்மி சேவ் மீ"

இவ்வாறு படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில் காட்சிகள் கடைசிவரை தொடர்கிறது. இவ்வாறு பல்வேறு திருப்புமுனைகளை கொண்டு உருவாகியிருக்கும் "மம்மி சேவ் மீ" திரைப்படம் இப்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இயக்குனர் பி.லோஹித்

இயக்குனர் பி.லோஹித்

கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்த இத்திரைப்படத்தை இயக்குனர் பி.லோஹித் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அஜ்னேஷ் ஙி. லோக்நாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் பி.சி.வேணு ஒளிப்பதிவு செய்திருக்க இப்படத்திற்கு ரவிச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஓடிடி தளத்தில் வெளியாகி

ஓடிடி தளத்தில் வெளியாகி

அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி உருவாகியிருக்கும் "மம்மி சேவ் மீ" திரைப்படம் ஜேஎஸ்கே பிரைம் மீடியா எனும் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X