»   »  போஸால் வந்த கேஸ்!

போஸால் வந்த கேஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் கொடுத்த கவர்ச்சி போஸ், புதிய பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்குப் பதில் கோர்ட்டுக்கு அவரைஇழுத்து விட்டுள்ளது.

பா.ம.க.வுக்கும் தமிழ் சினிமாக்காரர்களுக்கும் பாசப் பிணைப்பு ஜாஸ்தி. ஏதாவது ஒரு ஏடாகூடம் நடந்துகொண்டேதான் இருக்கும். முதலில் ரஜினி சிக்கினார். அப்புறம், தமிழில் படப் பெயர்களை வைக்கக் கோரிபெரும் போராட்டத்தில் குதித்தது பாமக.

பிறகு வந்து வசமாக மாட்டினார் குஷ்பு. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் இப்போது மும்தாஜ் சிக்கியுள்ளார்.டி.ராஜேந்தர் இயக்கத்தில் வீராசாமி என்ற படத்தில் மும்தாஜ் ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டுள்ளார். இதில்சால்ட் கொட்டா சரசு என்ற கடுமையான கிளாமர் வேடத்தில் கலக்கிக் கொண்டுள்ளார் மும்ஸ்.

மும்ஸுக்கு, படம் முழுக்க பாதி உடையைத்தான் கொடுத்துள்ளாராம் டி.ஆர். இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கும்மும்ஸ், இப்படத்திற்காக ஒரு சூப்பர் குஜாலங்கடி போஸ் கொடுத்துள்ளார்.

நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில், வக்கீல்களின் விவாதங்கள், நீதிபதிகளின் கருத்துக்கள், தீர்ப்புகள்அடங்கிய நூல் ஒன்று இருக்கும். இதில் பழைய வழக்குகள் குறித்த விவரங்களையும் பார்க்க முடியும்.இப்படிப்பட்ட நூல்களுக்கு மத்தியில் மும்தாஜ் படு கவர்ச்சியாக படுத்துக் கிடப்பது போல போஸ் கொடுக்கவைத்து போட்டோ எடுத்துள்ளாராம் டி.ஆர்.

இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டு விட்டது. வக்கீல்கள் புனிதமாக மதிக்கும் ஒரு நூலுக்கு மத்தியில் படுஆபாசமாக மும்தாஜ் படுத்திருப்பது போல போட்டோ எடுப்பதா? என்று பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர்ஜானகி ராமன் என்பவர் கொந்தளித்துள்ளார்.

சட்டத்தையே அவமதித்து விட்டார் மும்தாஜ் என்று கூறியுள்ள ஜானகிராமன் வேலூர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மீதுவழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மும்தாஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

பேசினாலும் பஞ்சாயத்து, போஸ் கொடுத்தாலும் பிரச்சினை. நடிகைகங்க பாடு படு திண்டாட்டமாப் போச்சே!

Read more about: mumtaz in trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil