»   »  மும்தாஜ் மீது போலீசில் புகார்

மும்தாஜ் மீது போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வீராசாமி படத்தில் மிகக் கவர்ச்சியாக நடித்திருப்பதாக மும்தாஜ் மீதும் படத்தின் டைரக்டர் விஜ.ராஜேந்தர் மீதும்போலீசில் பாமக நிர்வாகி புகார் கொடுத்தள்ளார்.

சென்னை ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன். வழக்கறிஞரான இவர் பாமகவின் வேலூர் வடக்குமாவட்ட மாணவர் சங்க செயலாளராகவும் உள்ளார். இவர் ராணிப்போட்டை காவல் நிலையத்தில் புகார் மனுஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

விஜய.டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவரவுள்ள வீராசாமி படத்தில் நடிகை மும்தாஜ் மிகவும் கவர்ச்சியாக,சாய்ந்து கொண்டு இருப்து போல் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை ஒரு கொடுத்திருக்கும் போட்டோவைஒரு பத்திரிகையில் பார்த்தேன்.

வழக்கறிஞர்கள் புனிதமாகவும், உயர்வாகவும் கருதக்கூடிய ஆல் இண்டியா ரிப்போட் எனப்படும்புத்தகங்களுக்கு அருகிலும், பின்னாலும் மும்தாஜ் படுத்துக் கொண்டிருப்பது போல் படம் உள்ளது. மேற்கூறியபுத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஆகும்.
அந்த புத்தகங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றதில் வாதம் செய்யும்போது அடிப்படை மூலாதாரமாகபயன்படுகின்றன. பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழில் ஆகியவற்றைகேவலப்படுத்துவதாகவும, அவமானப்படுத்தி, கெச்சைப்படுத்துவது போலவும் உள்ளது.
எனவே இந்த படத்தில் நடித்த நடிகை மும்தாஜ், படத்தின் இயக்குனர் விஜய.டி.ராஜேந்தர் ஆகியோர் மீதுநடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் வீராசாமி படத்தில் அந்த கவர்ச்சி படத்தின் ஸ்டில்லைதடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்படுட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil