Don't Miss!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பெண்களின் பாதுகாப்பு முக்கியம்- சிசிடிவிக்காக ஆடைகளை தானமளித்த மும்தாஜ்
Recommended Video
மும்பை: நடிகை மும்தாஜ் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உடுத்தியிருந்த சில டிசைனர் ஆடைகளை ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்கு தானமாக அளித்துள்ளார். அந்த தனியார் ஊடகம் பெண்கள் பாதுகாப்புக்காக, மும்பை நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதி திரட்டி வருகிறது. அந்த ஊடகம் மும்தாஜ் பயன்படுத்திய ஆடைகளை விற்று வரும் பணத்தில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலைகளுக்கு செலவிடப்போகிறது என்று கூறியுள்ளது.
மும்தாஜ் தென்னிந்திய சினிமாவில், அனைவருக்கும் தெரிந்த நடிகை. இவரின் பிறந்த ஊர் மும்பை ஆகும். அதனாலேயே இவர் இந்தி சினிமாவில் இருந்து தனது நடிப்புலக வாழ்க்கையை துவங்கினார். மும்தாஜ் தமிழில் டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கிய மோனிஷா என் மோனலிஷா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு குஷி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் மும்தாஜுக்கு என்று தனி பெயரை பெற்று தந்தது.

அந்தப் படத்தில் கொஞ்சம் கவர்ச்சி நாயகியாக வந்ததால், அவர் அதற்குப் பிறகு நடித்த பல படங்களிலும் அவ்வாறே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கூடவே, சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார் மும்தாஜ். அதோடு, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார்.
அதற்கு பிறகு, தமிழில் நடிக்காத மும்தாஜ் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து விட்டு, ,நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டார். இதன் பிறகு சில வருடங்கள் கழித்து, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் கலந்து கொண்டு சில வாரங்கள் தாக்குப்பிடித்தார் மும்தாஜ்.
அந்த சீசனில் மும்தாஜ் தனது செயல்களால் பலராலும் பாராட்டப்பட்டார். அது மட்டுமின்றி ஆடை அணிவதிலும், மிகவும் கவனம் செலுத்தும் மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தார்.
சத்தமில்லாமல் கவின், லாஸ்லியா விருந்த கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!
தற்போது தனியார் ஊடகம் ஒன்று பெண்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் மும்பை நகரம் முழுவதும் அமைக்க நிதி திரட்டி வருகிறது. அதற்காக முமதாஜ் தான் பிக்பாஸ் வீட்டில் அணிந்திருந்த சில டிசைனர் உடைகளை அந்த ஊடகத்திற்கு தந்துள்ளார்.
அந்த ஊடகம் ஆடைகளை விற்று வரும் பணத்தில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலைகளுக்கு செலவிடப்போகிறது என்று கூறியுள்ளது. இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். மும்தாஜ். அதில் இந்த நிதி திரட்ட தன்னாலான சிறிய பங்களிப்பு இது என்றும் கூறியுள்ளார்.