அவனை பார்த்ததும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது: மும்தாஜ்

Recommended Video

என்னக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆச வந்துடுச்சு : மும்தாஜ் அதிரடி பேட்டி- வீடியோ

சென்னை: நடிகை மும்தாஜுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்துள்ளது.

டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மும்தாஜ். பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Mumtaj talks about marriage!

சாக்லேட் திரைப்படத்தில் ஹாஸ்டலில் ஆட்டம்போட்ட மலை மலை பாடலும், குஷியில் விஜய்யுடன் ஆட்டம் போட்ட கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலும் மும்தாஜின் ட்ரேட்மார்க் பாடல்களாக மாறின. வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மும்தாஜ் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஷாரிக்கிடம் அவர் ஒரு தாயைப் போல பாசம் காட்டினார். 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனைப் பார்த்தபோது தனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

மேலும், விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது. எனக் கூறினார். ஆனால் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X