முந்தானை முடிச்சு ரீமேக்.. பாக்கியராஜ் உடன் கைகோர்த்த சசி குமார்.. முருங்கை காய் காமெடி இருக்குமா?

சென்னை: 1983ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்திற்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தற்போது அந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

மீண்டும் கேவி ஆனந்துடன் இணையும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!- Filmibeat Tamil

சமீபத்தில் நடிகர் பாக்கியராஜை சந்தித்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார், மீண்டும் முந்தானை முடிச்சு படத்தின் மேஜிக்கை திரையில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

ரஜினியின் பில்லா, தில்லு முல்லு உள்ளிட்ட படங்கள் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

ரீமேக் படங்கள்

ரீமேக் படங்கள்

டான் என பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான படத்தை பில்லா என்ற டைட்டிலில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரீமேக் செய்து ஹிட் அடித்தார். அதே படத்தை அதை டைட்டிலில் அஜித் நடிப்பில் வெளியான படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், ரஜினியின் மற்றொரு படமான தில்லு முல்லு படம் காமெடி நடிகர் சிவா நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முந்தானை முடிச்சு

மீண்டும் முந்தானை முடிச்சு

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் முந்தானை முடிச்சு படம் மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் என அனைத்து பணிகளையும் பாக்கியராஜே செய்வதால், அந்த படத்தின் மேஜிக் மற்றும் சுவாரஸ்யத்துக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜே.எஸ்.பி ஃபிலிம் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்க முன் வந்து இருக்கிறது.

ஃபிளாப்

ஃபிளாப்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சசிகுமாரின் மூன்று படங்களை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், ஜனவரி மாத இறுதியில் சமுத்திரகனி இயக்கத்தில் வெல்வோம், வெல்வோம் என விளம்பரம் செய்து வெளியான நாடோடிகள் 2 படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக

வரிசையாக

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை இயக்கி வந்த பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. மேலும், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களும் சசிகுமார் நடிப்பில் ரிலீசுக்கு காத்துக் கிடக்கின்றன.

முருங்கை காய் இருக்குமா

முருங்கை காய் இருக்குமா

இந்நிலையில், அடுத்ததாக பாக்கியராஜ் உடன் இணைந்து எவர்க்ரீன் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தை மறு உருவாக்க சசிகுமார் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசி கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார் மற்றும் படக்குழு உள்ளிட்ட பல தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த முருங்கை காய் சார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X