கணவரே ஊத்தி கொடுத்தார்.. குடிக்கு அடிமையாக இருந்தேன்..40 வயதில் இரண்டாம் திருமணம் மனம் திறந்த ஊர்வசி!

சென்னை: நடிகை ஊர்வசி நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் என் கணவரே எனக்கு ஊத்தி கொடுத்தார் என்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயத்தை மனம் திறந்து கூறியுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஊர்வசி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தது.

mundhanai mudichu urvashi shared personal life story

நடிகை ஊர்வசி: முதல் படத்திலேயே கண்ண தொறக்கணும் சாமி...கை பிடிக்கணும் சாமி என முதல் படத்திலேயே விவகாரமான உடையில் ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

முன்னணி நடிகை: 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிய இவர், மோகன், சத்யராஜ், பிரபு, கமல் என அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

முதல் கணவரை பிரிந்தார்: படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் நடிகர் மனோஜ்-ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதே போல நடிகை ஊர்வசியும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஊர்வசி மனம் திறந்த பேட்டி: நடிகை ஊர்வசி தற்போது அம்மா, நகைச்சுவை நடிகை, குணசித்திர கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஊர்வசி தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேசி உள்ளார். அதில், நான் நடிகர் மனோஜ் கே. ஜெயனை திருமணம் செய்து கொண்டேன்.

குடிக்கு அடிமையாக இருந்தேன்: அவருடனான வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிந்துவிட்டது, அதற்கு காரணம் குடிப்பழக்கம், அவரது குடும்பத்தில் அனைவருமே ஒன்றாக குடிப்பார்கள், அவர் தான் எனக்கு ஊற்றித்தருவார். தினமும் குடித்து குடித்து நான் குடிக்கு அடிமையாகி விட்டேன், என்னை குடிக்கு அடிமையாக்கியதே அவர் தான், அதுவே, நாங்கள் பிரிய காரணமாக அமைந்துவிட்டது.

mundhanai mudichu urvashi shared personal life story

40 வயதில் திருமணமா: அதே குடியை காரணம் காட்டி என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டார். அப்போது நான் தனிமையில் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது தான், எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டாவது திருமணம் ஆகும் போது 40 வயது இருக்கும்.

40 வயதில் திருமணமா? என்று பலர் என்னை விமர்சித்தார்கள். ஆனால், அதை எல்லாம் நான் என் காதில் வாங்கி கொள்ளவில்லை. தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X