அட! நம்ம முந்தானை முடிச்சு பட்டு டீச்சரா இவங்க? பேரக்குழந்தையுடன் எப்படி சிரிக்கிறாரு பாருங்க
சென்னை: பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தை எப்போதும் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அதில், வந்த சிறு பாத்திரங்கள் கூட ரசிகர்களின் மனதில் இன்னமும் அப்படியே நிறைந்து இருக்கின்றன.
அந்த படத்தில் கவர்ச்சி டீச்சராக நடித்த நடிகை தீபா தற்போது தனது குடும்பத்தினர் மற்றும் பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பல ஆண்டுகள் கழித்து நடிகை தீபாவை கண்ட ரசிகர்கள் மலரும் நினைவுகளில் மூழ்கிப் போயுள்ளனர்.

முந்தானை முடிச்சு பட்டு டீச்சர்: கடந்த 1983ம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த படம் முந்தானை முடிச்சு. அந்த படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் காமெடிக்கு அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தது அந்த பட்டு டீச்சர் கதாபாத்திரம் தான்.
ஊர்வசி ஹீரோயினாக நடிப்பில் மிரட்டி இருப்பார். அதே சமயம் அலட்டிக் கொள்ளாமல் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை தீபா தான்.

ரஜினி கமலுடன்: மலையாள நடிகையான உன்னி மேரி குழந்தை நட்சத்திரமாகவே 60களில் இருந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். 1975ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் அந்தரங்கம் படத்தில் தீபா எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை உன்னி மேரி தமிழ் சினிமாவில் அதே பெயரில் அழைக்கப்பட்டார்.
நீயா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ரஜினிகாந்தின் ஜானி, மீண்டும் கோகிலா, கண்ணாடி, முந்தானை முடிச்சு, பட்டத்து ராணி என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடா, தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
பாட்டியான பட்டு டீச்சர்: 1982ம் ஆண்டு எர்ணாக்குளம் புனித ஆல்பர்ட் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை தீபா தொடர்ந்து சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

ரிஜாய் - தீபா தம்பதியினருக்கு நிர்மல் எனும் மகன் உள்ளார். அவர் ரஞ்சினி எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு ரிஹான் எனும் குழந்தை உள்ளது. சமீபத்தில் பாட்டியான தீபா தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
பேரக்குழந்தையுடன் கொஞ்சல்: தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தை ரிஹான் உடன் நடிகை தீபா எடுத்துக் கொண்ட புகைப்படமும் தனியாக பேரக்குழந்தையை சிரித்துக் கொஞ்சும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி நடிகை தீபாவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











