முரளி பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.. அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்!

சென்னை : சூரிய வம்சம், வானத்தைப்போல , பூவே உனக்காக, உன்னை நினைத்து என பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்

கடைசியாக நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கிய விக்ரமன் அதன்பிறகு படங்கள் எதையும் இயக்கவில்லை

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பூவே உனக்காக படத்தில் முரளி பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாக நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்

வெள்ளி விழா

வெள்ளி விழா

குடும்ப ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி வசூலை வாரி குவித்துள்ளது மேலும் இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பல தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த வருவதால் இவரின் பல படங்கள் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பூவே உனக்காக

பூவே உனக்காக

புதுவசந்தம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விக்ரமனுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம்,கோகுலம், புதியமன்னர்கள் என தொடர் வெற்றிகளை கொடுத்த விக்ரமனுக்கு பூவே உனக்காக மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஆல் கிளாஸ் ஆடியன்ஸ்யும் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் சுமாரான வெற்றிகளை கொடுத்து வந்த விஜய்க்கு இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

உறவுகளின் முக்கியத்துவம்

உறவுகளின் முக்கியத்துவம்

காதலையும் குடும்ப உறவுகளின் முக்கியத்தையும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகவும் அனைவருக்கும் பிடிக்கின்ற வகையிலும் கூறியிருந்த பூவேஉனக்காக திரைப்படத்தில் நம்பியார்,நாகேஷ் உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து இருப்பார்கள். காதல் காமெடி உறவுகளின் பாசம் என அனைத்தும் நிரம்பிய படமாக வெளியான பூவே உனக்காக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார்

முரளி பணம் வாங்காமல் நடித்தார்

முரளி பணம் வாங்காமல் நடித்தார்

எஸ் ஏ ராஜ்குமார் இசையில் பூவே உனக்காக படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு முரளி குத்தாட்டம் போட்டு இருப்பார். பொதுவாக படங்களிலேயே பெரிதாக டான்ஸ் ஆடாத முரளி விக்ரமன் கேட்டுக் கொண்டதற்காக பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கெஸ்ட் ரோலில் வந்து ஆடியிருப்பார். மேலும் இந்த பாடலில் நடித்ததற்காக சம்பளமே வாங்காமல் நட்புக்காக மட்டுமே முரளி நடித்து கொடுத்ததாக விக்ரமன் நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X