For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ்…. இரண்டாம் பாகம் உருவாகுது!

    |

    சென்னை : முரளி மற்றும் வடிவேலுவின் நடிப்பில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

    வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆபாச பட விவகாரம்.. ராஜ் குந்த்ராவை சிக்க வைத்த முக்கிய ஆதாரம் இதுதான்.. மும்பை போலீஸ் பரபர தகவல்! ஆபாச பட விவகாரம்.. ராஜ் குந்த்ராவை சிக்க வைத்த முக்கிய ஆதாரம் இதுதான்.. மும்பை போலீஸ் பரபர தகவல்!

    நகைச்சுவை படம்

    நகைச்சுவை படம்

    2002ம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலுவின் நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தில் வினுசக்கரவர்த்தி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

    வசூலை வாரிக் குவித்தது

    வசூலை வாரிக் குவித்தது

    இந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காமெடி காட்சியும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு ரெடி பண்ணும் காட்சி அல்டிமேட், சிரிச்சி சிரிச்சி வயிரே வலிக்கும். எப்போ இந்த காட்சியை பார்த்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது. இப்படம் கிட்டத்தட்ட பல நாட்கள் திரையில் ஓடி பெரும் வசூலை வாரிக்குவித்தது.

    சுந்தரா டிராவல்ஸ் 2

    சுந்தரா டிராவல்ஸ் 2

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பல படங்கள்

    பல படங்கள்

    கமலின் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு இரண்டாம் பாகம் எடுப்பது அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா 2, துப்பறிவாளன் 2, பாபநாசம் 2, சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் வரிசைகட்டிக்கொண்டு வெளியாக உள்ளன. இந்த வரிசையில் இந்த திரைப்படமும் இணைந்துள்ளது.

    English summary
    Murali and Vadivelu‘s Sundara travels 2 taken
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X