சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் முரளியின் இரண்டாவது மகன்.. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாகிறார்!

சென்னை: நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார்.

நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தள்ளி போகாதே, குருதி ஆட்டம். ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆகஸ்ட்டில் திருமணம்

ஆகஸ்ட்டில் திருமணம்

இந்நிலையில் நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் சினிமாவில் நடிக்கவுள்ளார். ஆகாஷுக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

பெற்றோர் சம்மதத்துடன்..

பெற்றோர் சம்மதத்துடன்..

சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2019-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில்

இந்நிலையில் ஆகாஷை ஹீரோவாக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சில இயக்குநர்களிடம் கதைகளும் கேட்கப்பட்டு வந்தது. அதில் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய கதை பிடித்திருந்ததால் அவரது படத்தில் ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் பணிகள்

விரைவில் பணிகள்

தற்போது விஷ்ணுவர்தன் இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து ஆகாஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்ட வேலைகளை விஷ்ணுவர்தன் தொடங்குவார் என தெரிகிறது.

More from Filmibeat

Read more about: murali akash vishnuvarthan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X