மீடியா வெளிச்சத்திற்கு வரும் முரளியின் இரண்டாவது மகன்... வைரலாகும் போட்டோ!
சென்னை: தமிழ் சினிமா நடிகர்கள் பலர் தங்களது குடும்பத்தை மீடியா வெளிச்சத்தில் காட்டாமல் இருக்கின்றனர். சினிமா பார்வையால் தங்களது குடும்பத்துக்கு எந்த ஒரு பிரச்னையோ, சிக்கல்களோ வந்துவிடக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
ரஜினி, விக்ரம் போன்றோ பலரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்கள் தங்களது குடும்பத்தினரை மீடியா வெளிச்சத்தில் பல காலம் படமால் வைத்திருந்தனர். ரஜினி மகள்கள் ஐஷ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் வளர்ந்த பின்புதான் வெளியே தெரியத் தொடங்கினர்.

அப்படி தனது குடும்பத்தினரையும் மீடியா வெளிச்சத்தில் படாமல் பார்த்துக் கொண்டவர் நடிகர் முரளி. அவரது முதல் மகன் அதர்வா தற்போது தான் சினிமாவில் நடிப்பதன் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதர்வா, ஆகாஷ் ஆகியோரோடு முரளியின் மனைவி ஷோபா ஆகியோர் இணைந்து எடுத்திருக்கும் இந்தப் புகைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











