twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிஷப் சிக்கலில் முரளி-மன்சூர்

    By Staff
    |

    யார் பிரச்சனையில் மாட்டினாலும் நடிகர், நடிகைகள் பெயரை இழுத்து விடுவது பேஷனாகி விட்டது என பிஷப்ஆனந்தராஜுக்கு நடிகர் முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வீடுகட்டித் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடிபணத்தை மோசடி செய்து விட்ட பிஷப் ஆனந்தராஜ், அவரது மனைவி உள்ளிட்டோர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆனந்தராஜ் பல நடிகை, நடிகர்களிடம் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. நடிகர், நடிகைகளிடமும்அரசியல்வாதிகளிடமும் தான் நான் பணத்தை இழந்தேன் என்று பிஷப் வாக்குமூலம் தந்துள்ளார்.இதில் நடிகர் முரளியின் பெயரும் அடிபடுகிறது. இது குறித்து முரளி கூறுகையில்,

    நான் நடித்த ஒளி படத்திற்காக டைரக்டருடன் சென்று பிஷப் ஆனந்தராஜை சந்தித்தேன். யாரையும் ஏமாற்றும்சூழ்நிலை எனக்கில்லை. அப்படி பட்ட மனநிலையும் எனக்கு கிடையாது. விஜிபியில் ஒளி பட சூட்டிங்கில் நான்இருந்த போது அதன் டைரக்டர் ஒளிசந்திரன் பிஷப் ஆனந்தராஜை சந்திக்க என்னை அழைத்தார்.

    பிஷப்பிடம் கொஞ்சம் பைனான்ஸ் கேட்க வேண்டும். நீங்கள் வந்தால் தருவார் என்றார். பிஷப் என்பதால்மரியாதை நிமித்தமாக சந்திக்கலாம் என்று போனேன். பேரூர் சர்ச்சில் தான் அவர் இருந்தார். அத்தோடு சரி. நான்பணம் எல்லாம் வாங்கவில்லை.

    இப்போது யார் பிரச்சனையில் மாட்டினாலும் நடிகர் நடிகைகள் பெயரை இழுப்பது பேஷனாகி விட்டது. அந்தவகையில் என் பெயரை இழுத்து விட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினால்ஒத்துழைப்பு தருவேன் என்றார்.

    நான்தான் ஏமாற்றப்பட்டேன்: ஆனந்தராஜ்

    இதற்கிடையே மோசடி பிஷப் ஆனந்தராஜ் நீதிமன்றத்தில் தடாலடி வாக்குமூலம் தந்துள்ளார்.

    அதன் விவரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் ஏகாம்பரம் என்பவர் கட்டப் பஞ்சாயத்து செய்து என்னிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தையும், ஸ்கார்பியோகாரையும் பறித்துவிட்டார். சேலத்தைச் சேர்ந்த டாக்டர் குப்புசாமி என்பவர் ரூ. 55 லட்சம் பணத்தை என்னிடமிருந்து பறித்தார்.

    வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல தாதாவெளளை ரவி என்பவர் என்னிடமிருந்து ரூ. 1 கோடி பணத்தை பறித்துக் கொண்டார். அயோத்தி குப்பம் தாதாவீரமணியின் மைத்துனர் சுகுமார், சீனிவாச ரெட்டி ஆகியோர் அடங்கிய கும்பல் என்னிடமிருந்து பல லட்சம் பணத்தையும், பென்ஸ் காரையும் பறித்துக்கொண்டனர்.

    எனது மனைவியும், நானும் கைது செய்யப்பட்டபோது எங்களை மீட்பதாக கூறி குடும்ப நண்பரும், வக்கீலுமான சென்னையைச் சேர்ந்த ராஜசேகர் ரூ.3லட்சம் பணத்தையும், பென்ஸ் காரையும் அபகரித்து விட்டார். நடிகர்கள் மன்சூர் அலிகான்,முரளி ஆகியோர் என்னிடமிருந்து பல லட்சம் பணத்தைபெற்றுள்ளனர். அதையெல்லாம் மீட்டுத் தாருங்கள்.

    தென்னிந்தியாமுழுவதும் வீடு கட்டித் தரும் திட்டத்திற்காக ரூ. 8.70 கோடி பணத்தை வாங்கியிருந்தேன். இதில் ரூ.6 . 57 கோடியை திருப்பிக் கொடுத்துவிட்டேன். மீதப் பணத்தைத் தான் கொடுக்க வேண்டும்.

    என்னை புரோக்கர்களும், ஏஜென்டுகளும் ஏமாற்றி விட்டனர். உள்ளே இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக சுற்றிவருகின்றனர். வெளியே இருக்க வேண்டிய நான், எனது மனைவி, மாமனார், மைத்துனர், மருமகன் ஆகியோர் உள்ளே இருக்கிறோம்.

    எங்களது சர்ச்சை ரூ. 1 கோடிக்கு விற்க விலை பேசியுள்ளோம். கோவளம் பங்களாவை ரூ. 85 லட்சத்திற்கும், சென்னை பங்களா மற்றும் நிலத்தை ரூ. 23லட்சத்திற்கும், அடையாறு பிளாட்டை ரூ. 13 லட்சத்திற்கும், ஈரோட்டில் உள்ள நிலம், மனையை ரூ.27 லட்சத்திற்கும் விலை பேசியுள்ளோம்.

    இந்தப் பணத்துடன், எங்களிடமிருந்து பலரும் பறித்துக் கொண்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் நான் பணம் வாங்கிய காண்ட்ராக்டர்களுக்கு அதை திருப்பிக்கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆனந்தராஜ்.

    ஆனந்தராஜ் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர்கள்,அரசியல்வாதிகள், தாதாக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

    மன்சூர் மறுப்பு:

    ஆனால், ஆனந்தராஜ் கூறியுள்ள குற்றச்சாட்டை நடிகர் மன்சூர்அலி கான் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆனந்தராஜிடம் நான் பணம் பறித்ததாககூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்தான் என்னிடம்10 லட்சம் ரூபாயை பெற்றுவிட்டு ஏமாற்றி விட்டார். சில வருடங்களுக்கு முன்பு மறைந்தவலம்புரிஜான் மூலமாகத்தான் ஆனந்தராஜை சந்தித்தேன்.

    ஆனந்தராஜ் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு எனனை அழைத்தனர். அப்போது சந்தித்துக் கொண்டோம்.பின்னர் நிலம் வாங்குவது தொடர்பாக எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது. நான் 10 லட்சம் பணம் கொடுத்தேன். சொன்னபடி அவர் நடக்கவில்லை.இதனால் பணத்தை திருப்பிக் கேட்டேன். அவர் செக் கொடுத்தார். போட்டபோது அது திரும்பி விட்டது.

    இதையடுத்து ஆனந்தராஜ் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததேன். அதில் அவர் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட் பிடிவாரண்ட்பிறப்பித்தது. பின்னர் மாமல்லபுரம் போலீஸிலும் புகார் செய்தேன். டி.எஸ்.பி, எஸ்.பி. ஆகியோரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தேன்.

      Read more about: actor murali refutes charges
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X