Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா?: ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
சர்கார் பட போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ. 10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
ஒரு சிகரெட் காட்சிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
பிரச்சனை
தற்போது எல்லாம் விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை தானாக தேடி வருகிறது. சர்கார் பிரச்சனை குறித்து பேசிய டி. ராஜேந்தரோ, விஜய் ஒரு தமிழன் என்பதால் டார்கெட் செய்யப்படுவதாக கூறினார்.
ஸ்ரீரெட்டி
சர்கார் பிரச்சனையை தீர்க்க முருகதாஸ் முயற்சி செய்து வரும் நிலையில் தெலுங்கு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
படம்
ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி...நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய....இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை...நீங்களும் சிறந்தவர் சார்... என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
முருகதாஸ்
ஆனால் நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டி ஒரு வில்லங்க பார்ட்டி என்பதால் ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கிவிட்டனர்.
புகார்
தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீ ரெட்டி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முருகதாஸ் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி போஸ்ட் போட்டுள்ளது தேவையில்லாத பேச்சுகளுக்கு இடம் கொடுத்துள்ளது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!