துப்பாக்கியை போன்றே அதன் இந்தி ரீமேக்கான ஹாலிடேவும் ரூ. 100 கோடி வசூலாம்ப்பா!!!
மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இளைய தளபதி விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்தார். விஜய் ராணுவ வீரராக வந்த படத்தில் காஜல் அகர்வால் அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு சென்றார்.
இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து முருகதாஸ் இதை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

ரூ.100 கோடி
விஜய் நடித்த துப்பாக்கி ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்த வெற்றியை அடுத்து முருகதாஸ் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து துப்பாக்கியை இந்தியில் ரீமேக் செய்தார்.

ஹாலிடே
துப்பாக்கியை போன்றே அதன் இந்தி ரீமேக்கான ஹாலிடேவும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது. இதுவரை ஹாலிடே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

வசூல்
ஹாலிடே படம் இந்தியாவில் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. உலக அளவில் இதுவரை ரூ.120 கோடியை வசூல் செய்துள்ளது.

கஜினி
முன்னதாக முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படமான கஜினியை இந்தியில் ஆமீர் கானை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டு ரூ.100 கோடி வசூல் செய்தார். பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை துவக்கி வைத்ததே கஜினி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி
முருகதாஸ் தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்த படமும் ரூ. 100 கோடி வசூல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











