"கத்தி" அனிருத்தை இந்தியி்ல் அறிமுகப்படுத்துகிறார் ஏ.ஆர். முருதகாஸ்!
சென்னை: முருகதாஸின் அடுத்த இந்திப் படம் மூலமாக இசையமைப்பாளர் அனிருத் இந்தியில் அறிமுகமாகப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் அனிருத்தின் இசையும் பேசப்பட்டது.
இந்நிலையில், கத்தி படத்தைத் தொடர்ந்து இந்தியில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில், நாயகியை மையமாக வைத்த திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் முருகதாஸ்.

அனிருத் இசையில்...
இப்பட வேலைகள் வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் எனச் சொல்லப் படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கும் அனிருத்தையே இசையமைக்க வைக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளாராம்.

கொலைவெறி மூலம்...
ஏற்கனவே, தனது முதல்படமான ‘3' படத்தில் உள்ள ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் மூலம் பாலிவுட்டிலும் அனிருத் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் தான்.

முதல் இந்திப்படம்...
ஆனால், இந்த இந்திப்படம் மூலம் அவர் நேரடியாக அங்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸ் தயாரிப்பில்...
இது தவிர முருகதாஸ் தயாரிக்க உள்ள ஒரு படத்திலும் அனிருத் தான் இசையமைப்பாளராம்.


Click it and Unblock the Notifications











