மீண்டும் இணையும் முருகாற்றுப்படை கூட்டணி
கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த 'முருகாற்றுப்படை' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர்.

தனது முதல் படத்தில் நகர வாழ்வியலைக் காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனையைப் படம்பிடிக்கவுள்ளார்.
கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications