“முருங்கைக்காய் சிப்ஸ“ ஏதோ சொல்ல வீடியோ பாடல் ரிலீஸ் !
சென்னை : சாந்தனு பாக்யராஜ் நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஏதோ சொல்ல என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துவருகிறார்.
பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜயுடன்
சாந்தனு பாக்கியராஜ் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்பெற்ற இப்படம் வசூலைவாரிக்குவித்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 96 புகழ் கௌரி கிஷான் நடித்திருந்தார்.

தற்காலிக நிறுத்தம்
சாந்தனு தற்போது, ராவணக் கோட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதுல்யா ரவி
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில், சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி, மனோ பாலா, யோகி பாபு, மயில்சாமி, மதுமிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
Happy to launch the song video of #EdhoSolla from #MurungakkaiChips. All the best to entire team :) https://t.co/vv6NZzTz3GimKBRshanthnu AthulyaOfficial Srijar_Director LIBRAProduc
— Actor Karthi (Karthi_Offl) May 8, 2021
ஏதோ சொல்ல வீடியோ பாடல்
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதோ சொல்ல என்ற வீடியோ பாடலை வெளியிட்டார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











