முருங்கைக்காய் சிப்ஸ் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று தெரியாது... அதுல்யா ரவி வெளிப்படை

சென்னை : நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி மற்றும் கே பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

இந்தப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கமிட் ஆகும்போது படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தற்போது அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி மற்றும் கே பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கான விமர்சனங்கள் கலவையான நிலையில் கிடைத்துள்ளது.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

மாஸ்டர் படத்திற்கு பிறகு சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படம் முதலிரவை மையமாகக்கொண்டு வெளியாகியுள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்து இருந்த நிலையில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தாத்தாவாக கே பாக்யராஜ்

தாத்தாவாக கே பாக்யராஜ்

படத்தில் சாந்தனுவுக்கு தாத்தாவாக கே பாக்யராஜ் நடித்துள்ளார். சாந்தனு மற்றும் அதுல்யா விற்கு திருமணம் நடைபெற்று அவர்கள் முதலிரவில் ஏற்படும் பிரச்சினைகளை இந்தப்படம் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெற்றதா என்பதை இந்த படம் கூறுகிறது.

ஸ்ரீஜர் இயக்கம்

ஸ்ரீஜர் இயக்கம்

இயக்குனர் ஸ்ரீஜர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும் தரண் குமார் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ளன. ரமேஷ் சக்கரவர்த்தி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள்

இரட்டை அர்த்த வசனங்கள்

படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, கே பாக்யராஜ் இவர்களுடன் ஊர்வசி, யோகிபாபு, முனிஸ்காந்த், மனோபாலா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். முதலிரவு காட்சிகளை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் ஸ்ரீதர் இரட்டை அர்த்த வசனங்களை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.

ஏ சான்றிதழ் குறித்து அதுல்யா

ஏ சான்றிதழ் குறித்து அதுல்யா

இதனால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்த படத்தில் கமிட் ஆகும்போது படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அதுல்யா ரவி தெரிவித்துள்ளார். ஆனால் படத்திற்கு தேவையான காட்சிகளை தான் மனதில் கொண்டு நடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X