முருங்கைக்காய் சிப்ஸ் படத்தோட ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட படக்குழு
சென்னை : நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.
இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சாந்தனு பாக்யராஜ்
நடிகர் சாந்தனு பாக்யராஜ் கோலிவுட்டில் தன்னுடைய அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் இவர் நடித்திருந்தார். சிறிய ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்
இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் படம் உருவாகியுள்ளது. புதுமுக இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கதில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சாந்தனுவிற்கு அதுல்யா ரவி ஜோடியாகியுள்ளார். ரவீந்திரன் சதிரசேகரன் சார்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

பாடல்கள் வெளியீடு
இந்தப் படத்திற்கான புரோமோஷன்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தரண்குமார் இசையில் படத்தின் டாக்கு லெஸ்ஸு வொர்கு மோரு, வைல்ட் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஏதோ சொல்ல என்ற பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டன.
Recommended Video

ட்ரெயிலருக்கு வெயிட்டிங்
அடுத்ததாக படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தில் சாந்தனு, அதுல்யா ரவியுடன் கே பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, ஜாங்கிரி மதுமிதா, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் சக்ரவர்த்தி மேற்கொண்டுள்ளார்.

படத்தின் ரிலீஸ்
இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 19ம் தேதி ரிலீஸ்
அடுத்த மாதம் 19ம் தேதி உலகளவில் படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாந்தனு பாக்யராஜூம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளார்.

அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் சாந்தனு
கோலிவுட்டில் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் நடிகர்களில் சாந்தனு பாக்யராஜூம் ஒருவர். சிறப்பான பின்புலம் இருந்தாலும் இவர் தனக்கான இடத்தை கோலிவுட்டில் பிடிப்பதற்காக இவர் தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்நிலையில் முருங்கைக்காய் சிப்ஸ் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











