நாளை ரிலீசாகும் முருங்கைக்காய் சிப்ஸ் படம்... டீசரை வெளியிட்ட படக்குழு!
சென்னை : நடிகர் சாந்தனு அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.
Recommended Video
இந்தப்படம் நாளையதினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் அதுல்யா ரவி. இவர்களுடன் கே பாக்யராஜ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
படம் ரொமான்டிக் காமெடியாக உருவாகி உள்ளது. இந்த படம் நாளையதினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார்.
படத்தில் மேலும் மனோபாலா, யோகி பாபு, ஊர்வசி ஆனந்தராஜ், மயில்சாமி, உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த இந்த படம் நாளைய தினம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்திற்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு இடையில் முதல் இரவில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உள்ளதால் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் டீஸரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் முதலிரவு சம்பவங்களை மையப்படுத்திய காட்சிகள் காணப்படுகின்றன.மொத்தத்தில் அவருடைய அப்பா பாக்கியராஜின் வழியை தற்போது மகன் சாந்தனுவும் பின்பற்றியுள்ளது இந்த படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தந்தைவழி சாந்தனுவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











