முருங்கைக்காய் சிப்ஸ் படமும் ஓடிடியிலதான் வெளியாக இருக்காம்... விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கு

சென்னை : சாந்தனு, பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்புல உருவாகியுள்ளது முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம்.

இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

மாஸ்டர் படத்தில் கடைசியாக நடித்த சாந்தனு பாக்யராஜ் அடுத்ததாக இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்துள்ளார். படத்தில் அதுல்யா ரவி மற்றும் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகிபாபு, முனீஷ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தரண்குமார் மியூசிக்

தரண்குமார் மியூசிக்

ரொமாண்டிக் காமெடியாக இந்த படம் உருவாகியுள்ளது. லிப்ரா ப்ரொடக்ஷன் மற்றும் பர்ஸ்ட்மேன் பிலிம் வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தரண் குமார் மியூசிக் அமைத்துள்ளார். தியேட்டரில் வெளியாகும் என்று இந்த திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் தற்போது லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar
வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்

மாஸ்டர் திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் சாந்தனுவிற்கு அந்த படத்தில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவரின் அடுத்த படம் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X