twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முருங்கைக்காய் சிப்ஸ்… டிரைலரே கசமுசாவா இங்கே…அப்போ படம் !

    |

    சென்னை : சாந்தனு பாக்யராஜ் நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

    இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துவருகிறார்.

    சிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு!சிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு!

    பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஜயுடன்

    விஜயுடன்

    சாந்தனு விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்பெற்ற இப்படம் வசூலைவாரிக்குவித்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 96 புகழ் கௌரி கிஷான் நடித்திருந்தார்.

    தற்காலிக நிறுத்தம்

    தற்காலிக நிறுத்தம்

    சாந்தனு தற்போது, ராவணக் கோட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதுல்யா ரவி

    அதுல்யா ரவி

    முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில், சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி, மனோ பாலா, யோகி பாபு, மயில்சாமி, மதுமிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    விவகாரமான டிரைலர்

    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பெயருக்கு ஏந்த மாதிரியே படத்தின் டிரைலரும் கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. முருங்கைக்காய்னாலே விவகாரம் தான் அதுலே முருங்கைக்காய் சிப்ஸ் வேற படத்துல கசமுசா விவகாரத்துக்கு பஞ்சமே இருக்காது போல.

    English summary
    Murungakkaichips trailer out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X