சல்மான் 'பாடி'யுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் 'லேடி' யுவெட் ஷா!
மும்பை: ஹாலிவுட்டிலிருந்து ஒரு வெயிட்டான நடிகையை பாலிவுட்டுக்குக் கொத்திக் கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி. வீணா மாலிக் நடிக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இந்த ஹாலிவுட் நடிகையும் நடிக்கிறார். அவரது பெயர் யுவெட் ஷா.

ஹாலிவுட்டின் கட்டுடல் அழகி
யுவெட் ஷாவுக்கு ஹாலிவுட்டின் கட்டுடல் அழகி என்று பெயர் உண்டாம். காரணம், ஆண்களுக்கு நிகராக இவரும் மஸ்ஸில் பவருடன் படா மிரட்டலாக இருப்பதால்.

பாலிவுட்டுக்கு முதல் என்ட்ரி
பாலிவுட் சினிமா மீது ஆர்வம் கொண்டவரான யுவெட்டுக்கு தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படம்தான் முதல் படமாம். இதனால் படு ஆர்வமாக இருக்கிறார்.

சல்மான் பாடி பிடிக்கும்.. சிலாகிக்கும் யுவெட்
சல்மான் கான் என்றால் யுவெட்டுக்கு ரொம்ப இஷ்டமாம். அதுவும் அவரது கட்டுடலுக்கு இவர் பெரும் ரசிகையாம். சல்மான் கான் தான் உண்மையான ஆண்மகன். அவர் இருக்கும் பாலிவுட்டில் நான் நடிக்கவிருப்பது சந்தோஷம் தருகிறது.

சல்மானுடன் சேரணும்... யுவெட்டின் ஆசை
சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப மகிழ்வேன். பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் சிலாகிப்புடன்.

அர்னால்டுடன் நடித்தவர்
ஹாலிவுட்டில் அர்னால்ட் ஸ்வார்சனீகர் உள்ளிட்ட ஆக்ஷன் நாயகர்களுடன் நடித்த அனுபவம் உடையவர் யுவெட். உலகின் மிக வலிமையான உடலமைப்பு கொண்ட நடிகை என்ற பெயரையும் பெற்றவராம்.

வீணாவுடன் மோதுவாரோ..!
'பாடிபில்டராக' காட்சியளிக்கும் யுவெட், 'கவர்ச்சி பில்டரான' வீணா மாலிக்குடன் சேர்ந்து நடிக்கவிருப்பதால் இருவருக்கும் ரோல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே சண்டைக் காட்சி எதையாவது இயக்குநர் வைப்பாரா என்ற எதிர்பார்ப்ப்பும் கிளம்பியுள்ளது!


Click it and Unblock the Notifications











