Don't Miss!
- News
டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன்? நான் கலைஞர் பிள்ளை.. ஸ்டாலின் பேச்சு-எழுந்து ஆர்ப்பரித்த தலைவர்கள்!
- Automobiles
பெட்ரோல் - டீசல் விற்பனை டல்... இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?
- Finance
இந்தியா-வின் உண்மையான நிலை என்ன..? எப்போது வல்லரசு ஆகும்..?
- Sports
ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்கள் பட்டியல் இதோ.. 2வது முறையாக இந்தியாவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு
- Lifestyle
சாமை கட்லெட்
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பிரபல பாலிவுட் நாயகியுடன் இணையும் ஜிவி பிரகாஷ்.. நடிப்பா -இசையா.. சொல்லலியே பாஸ்!
சென்னை : இசை அசுரன் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து தன்னுடைய படங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இவரது நடிப்பில் ஜெயில், பேச்சுலர், செல்ஃபி என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கோலிவுட்டில் இசையமைப்பாளராக துவங்கிய இவரது பயணம் தற்போது பாலிவுட் வரை நீண்டுள்ளது.
ரவுடி
பேபிக்கு
டஃப்
கொடுக்க
தயாரான
தனுஷ்..
வாத்தி
படத்தின்
ஹாட்
அப்டேட்டை
வெளியிட்ட
ஜிவி
பிரகாஷ்!

பன்முக நாயகன் ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர் சிறப்பான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்கள் இவரது இசையமைப்பிற்கு சான்றாக அமைந்துள்ளன.

நடிப்பிலும் சூப்பர்
தொடர்ந்து இசை மட்டுமில்லை, தனக்கு நடிப்பும் சிறப்பாக வரும் என்று நிரூபித்துள்ளார் ஜிவி பிரகாஷ். முதலில் காதலை மையமாக கொண்ட படங்களில் நடித்த இவர் தொடர்ந்து சிறப்பான இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்
சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயில், பேச்சுலர் மற்றும் செல்ஃபி போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. இந்தப் படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜிவி. மேலும் சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

பல படங்களில் இசை
இது மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது சூர்யா 41, அருண் விஜய்யின் யானை, கார்த்தியின் சர்தார், தனுஷின் வாத்தி, ராகவா லாரன்சின் ருத்ரன், காலிக்க யாருமில்லை போன்ற படங்களில் இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இந்தியிலும் ஜிவி பிரகாஷ்
இதனிடையே சூர்யா தயாரிப்பில் உருவாகிவரும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் இவர் கமிட்டாகியுள்ளார். முன்னதாக கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான தலைவி படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், அடுத்ததாக அவரது இன்னுமொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். தலைவி படம் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவானது.

கங்கணா ரணாவத்துடன் படம்
கங்கணா ரணாவத்துடன் அடுத்த படத்தில் இணைவது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை மணிகர்னிகா பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி
கங்கனா ரணாவத்துடன் தான் இணையவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜிவி பிரகாஷ், அந்தப் படத்தில் இசையமைக்கிறாரா அல்லது நடிக்கவுள்ளாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை. படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் இதுகுறித்து தெரியவரும்.