Vidaamuyarchi :விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்.. வெளியான தகவல்!

சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தின் டைட்டில் அவரது பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அவர் தொடர்ந்து ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Music composer Anirudh gets 5 crores as remuneration for Ajiths Vidaamuyarchi movie

விடாமுயற்சி படத்திற்காக அனிருத் பெற்ற சம்பளம் : நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது ஏகே62 படத்தின் சூட்டிங் உடனடியாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் டைட்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர் மகிழ்திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக விக்னேஷ் சிவன், அஜித்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர், இந்தப் படத்திலிருந்து விலகினார். தொடர்ந்து மகிழ் திருமேனி படத்தின் இயக்குநராகியுள்ளார். இதேபோல படத்தின் இசையமைப்பை அனிருத் மேற்கொள்ளவுள்ளார். விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வரும் நிலையில் தற்போது அஜித்தின் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமார் 105 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் இசையமைப்பை மேற்கொள்ளவுள்ள அனிருத், படத்திற்காக 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. படத்தின் நாயகியும் விரைவில் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Music composer Anirudh gets 5 crores as remuneration for Ajiths Vidaamuyarchi movie

இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் லோகேஷன்களை இறுதிச் செய்யும் பணியில் தற்போது மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் இணையவுள்ள இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், அந்தப் படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தற்போது அனிருத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X