Music director Anirudh: மலையாளத்தில் என்ட்ரி ஆகும் இசையமைப்பாளர் அனிருத்.. யார் டைரக்டர் தெரியுமா?
சென்னை: நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் டைசன் படம் உருவாகி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரித்து வருகிறது. சோஷியல் திரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்திற்கு முரளி கோபி திரைக்கதை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரேமம் சேஷம் மைக்கேல் பாத்திமா ஆகிய மலையாள படங்களில் அனிருத் பாடியிருந்தாலும் நேரடியாக மலையாள படத்திற்கு அவர் இதுவரை இசையமைக்காத நிலையில், இந்தப் படம் மூலம் அவர் மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் அனிருத்: இசையமைப்பாளர் அனிருத் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாலிவுட்டிலும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் மூலம் என்ட்ரி கொடுத்து சிறப்பான இசையமைப்பாளராக தன்னை அங்கும் நிலை நிறுத்தியுள்ளார். தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் தேவரா படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை மலையாளப் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தார் அனிருத்.
டைசன் படம்: இந்நிலையில் அடுத்ததாக டைசன் மலையாள படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பிரேமம், சேஷம் மைக்கேல் பாத்திமா ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார் அனிருத். இருந்தபோதிலும் இசையமைப்பாளராக அவர் செயல்படாத நிலையில், தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்விராஜ் இயக்கம்: இந்தப் படத்தின்மூலம் முரளி கோபி, பிரித்விராஜுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக லூசிபர் உள்ளிட்ட படங்களில் இந்தக் கூட்டணி மாஸ் காட்டியது. பிரித்விராஜின் இயக்கத்தில் உருவாகும் 4வது படமான டைசன் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இணைந்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தமழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்து மாஸ் காட்டிய சிவராஜ்குமார், மலையாளத்தில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தமிழிலும் இவர் ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
சலார் கொண்டாட்டத்தில் பிரித்விராஜ்: பிரித்விராஜ் சுகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியானது சலார். இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரித்விராஜ். இந்தப் படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் பிரித்விராஜும் கலந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











