என் மேல என்னை விட தனுஷுக்கு நம்பிக்கை அதிகம்.. திருச்சிற்றம்பலம் ஆடியோ ரிலீசில் அனிருத் நெகிழ்ச்சி!

சென்னை :நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது திருச்சிற்றம்பலம் படம்.

Recommended Video

Thiruchitrambalam | Kutty Story சொன்ன Dhanush, Audio launch சுவாரஸ்யம்! *Kollywood

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் திருச்சிற்றம்பலம். தனுஷின் ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குளில் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் தனுஷின் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்றுள்ளது. இதில் தாய்கிழவி, தேன்மொழி பாடல்களை எழுதியுள்ளார் தனுஷ்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி

இசை வெளியீட்டு நிகழ்ச்சி

இதனிடையே நேற்றைய தினம் தனியார் கல்லூரி ஒன்றில் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் வேட்டி சட்டையில் வந்தது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தி க்ரே மேன் படத்தின் ப்ரமோஷனிலும் தனுஷ் வேட்டி சட்டையில் கலந்துக் கொண்டார்.

தனுஷ் -அனிருத் இசைக்கச்சேரி

தனுஷ் -அனிருத் இசைக்கச்சேரி

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். படத்தின் பாடல்கள் மட்டுமின்றி, தனுஷின் படப்பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தன்னால் ஒருவரின் திறமையை சரியாக கணிக்க முடியும் என்றும் அதன் வெளிப்பாடே அனிருத் என்றும் தெரிவித்தார்.

தனுஷ் குறித்து அனிருத் பாராட்டு

தனுஷ் குறித்து அனிருத் பாராட்டு

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் தனுஷ் என்றும் தன்னைவிட தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவர் தனுஷ் என்றும் தெரிவித்தார். அனிருத் கூறியது போல தன்னுடைய 3 படத்தில் தான் அனிருத்திற்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

இந்தப் படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் மிகவும் சறிப்பாக சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது. பலபேரின் ரிங்டோனாக அந்த காலகட்டத்தில் அமைந்தது. இந்தப் படத்தில் இந்தப் பாடல் மட்டுமின்றி அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும்வகையில் சிறப்பாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X