Anirudh: தலைவர் ரெக்கார்ட் மேக்கர்.. ரஜினியை பாராட்டிய அனிருத்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ஜெயிலர்.
கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீசாகியுள்ளது. படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

படம் ரிலீசான அனைத்து இடங்களிலும் சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ரஜினிக்கும் நெல்சனுக்கும் சிறப்பான கம்பேக்கை படம் கொடுத்துள்ளது.
தலைவர் ரெக்கார்ட் மேக்கர் என பாராட்டு தெரிவித்த அனிருத்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகியுள்ளது ஜெயிலர். முன்னதாக இந்தக் கூட்டணி இணைந்து அண்ணாத்த படத்தை வெளியிட்ட நிலையில், சிவா இயக்கத்தில் வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரஜினிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் சிறப்பான பாடல்களையும் பிஜிஎம்மையும் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது இசையமைப்பில் படத்தின் 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான காவாலா பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
இந்தப் பாடலை ரீல்ஸ்களாக செய்து பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் படம் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஜெயிலர், ஜெயிலர் FDFS, ரஜினிகாந்த், நெல்சன், அனிருத், தமன்னா என அனைவரும் அடுத்தடுத்து ட்ரெண்டாகி வருகின்றனர். இன்றைய தினம் #JailerTelugu #JailerHit மற்றும் #Jailerblockbuster போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.
சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கான சில சர்ச்சைகள் தொடர்ந்துவரும் நிலையில் #ThalaivarNirantharam என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த வாசகத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் தலைவர் ரெக்கார்ட் மேக்கர் என்று தன்னுடைய ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களில் படம் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனிருத் ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து பாபா முத்திரையையும் எமேஜியாக கொடுத்துள்ளார். முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்த நிலையில், தனக்கான கம்பேக் படமாக ஜெயிலர் படத்தை கொடுத்துள்ளார் நெல்சன். இந்தப் படத்தின் பாடல்களை மிகவும் சிறப்பாக கொடுத்து, தானும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் அனிருத்.


Click it and Unblock the Notifications











