Anirudh: விக்ரம் படத்துக்காக கிடைத்த கிப்ட்.. அனிருத் சொன்ன விஷயம் இதுதான்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

கடந்த ஆண்டில் கமல்ஹாசனின் விக்ரம் படம் அனிருத் இசையில் வெளியான நிலையில், இந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது.

ஜெயிலர் படத்திற்காக அனிருத்திற்கு விலை மதிப்புமிக்க காரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசளித்துள்ளது.

Music composer Anirudh hails Jailer and Vikram movies for the gifts

விக்ரம் படத்தின்மூலம் கிடைத்த பரிசு குறித்து பேசிய அனிருத்: இசையமைப்பாளர் அனிருத் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இசைக்கு வசப்படுத்தியுள்ளார். தொடர்ந்து ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைத்து வரும் அனிருத், பாலிவுட்டிலும் ஜவான் படம்மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது இசையில் ஷாருக்கானின் ஜவான் படம் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

கடந்த மாதத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியான நிலையில், அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த லிரிக் வீடியோ பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக தமன்னா, ரஜினி ஆட்டத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காவாலா பாடல் ரகிர்களை வெகுவாக கவர்ந்து யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை பெற்றது.

இந்தப்படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், இந்தப் படத்தின் நடிகர் ரஜினிகாந்த், டைரக்டர் நெல்சன் திலீப்குமார் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த காரை தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் கொடுத்தது. இதுகுறித்து தற்போது அனிருத் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை படத்தின் வெற்றிக்கு நடிகர், இயக்குநர் போன்றவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் முதல்முறையாக படத்தின் இசையமைப்பாளருக்கும் சன் பிக்சர்ஸ் பரிசு கொடுத்து கௌரவித்துள்ளதாகவும் இந்தக் காரை தான் பொக்கிஷமாக பாதுகாக்கவுள்ளதாகவும் அனிருத் கூறியுள்ளார். இதனிடையே, விக்ரம் படத்திற்காக அவருக்கு என்ன மாதிரியான பரிசு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அனிருத், கமல்ஹாசன் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படமே தனக்கு மிகப்பெரிய கிப்ட் தான் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர்கள், நடிகர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜிற்கு விலையுயர்ந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளராக கமல்ஹாசன் இந்த பரிசை அவருக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதத்தில் வெளியாகி மாஸ் வெற்றி பெற்றுள்ள ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு விலையுயர்ந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X