Anirudh: ஆழ்வார்பேட்டை டூ அந்தேரி.. பாலிவுட் பயணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிருத்!
சென்னை: ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது ஜவான் படம்.
அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளது.
ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாக 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய நிலையில், அந்த வசூலை ஜவான் படம் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் பயணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிருத்: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜவான். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், படத்தின் வசூல் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாருக்கான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து பதான் படம் வெளியான நிலையில், அந்தப்படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படம் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில், தற்போது அந்த வரிசையில் ஜவான் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ.
இதுமட்டுமில்லாமல் இந்தப்படம் மூலம் பாலிவுட்டில் நடிகை நயன்தாராவும் என்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கும் இந்தப் படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளது. மேலும் விஜய் சேதுபதியும் படத்தில் மிரட்டலான வில்லத்தனத்தை வெளிக்காட்டியுள்ளார். யோகிபாபு, பிரியா மணி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் ரசிகர்களை கவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.
அனிருத் இசை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், பிஜிஎம் குறித்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் 100 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் தாண்டியுள்ள நிலையில், தொடர்ந்து படம் வசூல்மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தும் ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்தும் படத்தின் வசூல் மற்றும் ஷாருக்கான் குறித்தும் தொடர்ந்து ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள பதிவில், ஆழ்வார்பேட்டை டூ அந்தேரி வரை என்று தன்னுடைய திரைத்துறை பயணம் குறித்து பேசியுள்ளார். படம் குறித்தும் படத்தின் இசை குறித்தும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துவரும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு எல்லாமுமாக இருந்த ஷாருக்கானிற்கும் இந்தப் பதிவில் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அட்லீயும் தானும் கட்டியணைத்தபடி உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ரிலீசாகியுள்ளது ஜவான் படம். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை ஏறக்குறைய படம் பூர்த்தி செய்துள்ளது என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications











