ரஜினிகாந்தின் வேட்டையன் ஆடியோ லாஞ்சில் கூலி படம் குறித்து பேசிய அனிருத்.. அட இப்படி ஒன்னு இருக்கா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைத்து வேலை வாங்கியுள்ளார் இயக்குநர் டிஜே ஞானவேல்.
முன்னதாக ஜெய் பீம் படத்தை இயக்கி வரவேற்பை பெற்றிருந்த டிஜே ஞானவேலிடம் தனக்கு கமர்ஷியலான படம் வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டதாகவும் அதையடுத்தே வேட்டையன் படம் உருவாகியுள்ளதாகவும் நேற்றைய தினம் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். இவரது கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மேலதிகாரியாக அமிதாப்பும் படத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்படும் மோதலே படத்தின் கதைக்களம் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: மேலும் இவர்களுடன் ரித்திகா சிங், பகத் ஃபாசில், ராணா, அபிராமி உள்ளிட்டவர்களும் படத்தில் லீட் கேரக்டர்களில நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா, அடுத்தடுத்த பிரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளது. அனிருத் இசையில் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீடும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் வீடியோக்களையும் கடந்த சில தினங்களாக வெளியிட்டு லைகா மாஸ் காட்டியது.
வேட்டையன் இசை வெளியீடு: இந்நிலையில் நேற்றைய தினம் வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்சில் பல சுவாரஸ்யங்களை படக்குழுவினர் பகிர்ந்தனர். முன்னதாக ஜெய் பீம் படத்தை கொடுத்திருந்த நிலையில், தனக்கு மெசேஜ் சொல்ற கதை செட் ஆகாது என்றும் கமர்ஷியலாக படம் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டதை ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார். இதேபோல இந்தப் படத்தில் மனசிலாயோ பாடல் இந்த அளவிற்கு பெயர் வாங்கித் தரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று மஞ்சு வாரியர் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அனிருத் தான் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார்.
கூலி பட அப்டேட் கொடுத்த அனிருத்: டிஜே ஞானவேல் 100 சதவிகிதம் தனக்கு வேட்டையன் படத்தில் அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் தான் 1000 சதவிகிதம் தனக்கு அனிருத் தான் வேண்டும் என்று கேட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்துவரும் அனிருத், அவரது அடுத்தப்படமான கூலி படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பேசிய அவர், கூலி படம் வேற லெவல் சம்பவமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது அடங்க வெகுநேரம் பிடித்தது.


Click it and Unblock the Notifications











