Anirudh: விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா இவ்வளவா?
சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் 6ம் தேதி விடாமுயற்சி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் மாஸான புக்கிங்கை பெற்று வருகிறது.
அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ளது விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தால் ரிலீசும் அடுத்தடுத்து தேதிகளை அறிவித்து தாமதமாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டு வருகின்றன.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. அஜித் பட ரிலீசுக்காக ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு புது தெம்பையும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிக அளவில் கொடுத்துள்ளது. வரும் 6ம் தேதி திரையரங்குகளில் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் ஆரவ் என முன்னணி நடிகர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். ரோட் டிராவலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் தேவையில்லாத ஆக்சன் காட்சிகள் இணைக்கப்படவில்லை என்று மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
ஆக்ஷன் அதிகமில்லாத படம்: அஜித் படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக காணப்படும் நிலையில் இந்த புதிய முயற்சி அஜித்திற்கு சிறப்பாக அமையுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சர்வதேச அளவில் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் புக்கிங்குகள் தற்போது ஓபன் ஆகியுள்ளன. ரசிகர்கள் அதிக அளவில் படத்தின் டிக்கெட்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த பொங்கல் தல பொங்கலாக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பண்டிகை கொண்டாட்டம்: இருந்தபோதிலும் படம் ரிலீசாகும் நாள்தான் பண்டிகை என்று அஜித் கூறியதாக மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு அத்தகையதொரு வரவேற்பையும் கொண்டாட்டத்தையும் ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகிய மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அனிருத் முன்னதாக அஜித்துக்கு கொடுத்த பாடல்களை காட்டிலும் இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இசையமைப்பாளர் அனிருத் சம்பளம்: இந்நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் பெற்றுள்ள சம்பளம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அனிருத். இதையொட்டி அவரது சம்பளமும் கணிசமாக படத்திற்கு படம் அதிகரித்து வருகிறது. அடுத்ததாக ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருது-. தற்போது அவர் ஒரு படத்திற்கு இசையமைக்க 10 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











