Anirudh: இப்ப ஜவான் படத்தை என்ஜாய் பண்ணுங்க.. அடுத்த வாரம் லியோ.. அப்டேட் சொன்ன அனிருத்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தன்னை இணைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சிறப்பான பாடல்களை கொடுத்திந்தார் அனிருத்.
இந்நிலையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள ஷாருக்கானின் ஜவான் படத்திலும் அனிருத் தான் இசை. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

லியோ படத்தின் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர் அனிருத்: இசையமைப்பாளர் அனிருத் 3 படம் மூலம்தான் தமிழில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்துக் கொண்டார். முதல் படத்திலேயே வொய் திஸ் கொலவெறி என மாஸ் இசையை கொடுத்து, சர்வதேச அளவில் ஹிட்டானார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தொட்டதெல்லாம் சிறப்பாக அமைந்து வருகிறது. தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல் என அடுத்தடுத்த ஹிட் பட நாயகர்களுடன் இணைந்து அவர்களின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.
அனிருத் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது ரஜினிகாந்தின் ஜெயிலர். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். பிஜிஎம்மிலும் கலக்கியிருந்தார் அனிருத். படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமன்னா, ரஜினி ஆட்டத்தில் காவாலா பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. லிரிக் வீடியோவாக வெளியான இந்தப் பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை எப்போதோ கடந்து விட்டது.
இந்தப் படத்தை தொடர்ந்து இன்றைய தினம் அனிருத் இசையில் ஷாருக்கானின் ஜவான் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என லீட் கேரக்டர்களில் சூப்பர்ஹிட் நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் அனிருத். இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் பிஜிஎம்மிற்கு வரவேற்பு காணப்பட்டாலும் கலவையான விமர்சனங்களையும் பாடல்கள் பெற்று வருகிறது.
இதனிடையே அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தில் இசையமைத்து வருகிறார் அனிருத். அவரது இசையில் படத்தின் நான் ரெடி பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியானது. அதிரடி சரவெடியாக வெளியான இந்தப் பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தின் அப்டேட் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளதாக இன்றைய தினம் பத்திரிகையாளர்களுடன் பேசிய அனிருத் தெரிவித்துள்ளார். லியோ படத்தின் அப்டேட் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது, இன்றைய தினம் ஜவான் படத்தை திரையரங்குகளில் என்ஜாய் செய்யுங்கள் என்று அவர் இந்த சந்திப்பில் பேசியுள்ளார். லியோ படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான வேலைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அடுத்த வாரத்தில் இதுகுறித்து தெரியவரும் என்றும் அனிருத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் இவர்களின் பிறந்தநாளையொட்டி அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து அடுத்த வாரத்தில் தகவல்கள் வெளியாகவுள்ளதாக அனிருத் கூறியுள்ளது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 2வது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











