Anirudh: ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 4 அதிரடி.. அனிருத்தின் வேற லெவல் சம்பவம்!

சென்னை: சூப்பர்ஸ்டாரின் உறவினர் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அனிருத்தின் இசைப் பயணத்திற்கு அது எந்த வகையிலும் உதவவில்லை.

ஆனாலும் தன்னுடைய அத்தை மகள், ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் வெளியான 3 படத்தின்மூலம்தான் தன்னுடைய இசைப்பயணத்தை துவக்கினார் அனிருத்.

தற்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என இவரது வெற்றிப்பயணம் முன்னணி நடிகர்களுடன் தொடாந்து வருகிறது.

Music composer Anirudhs next to next songs within a month makes fans thrilling

ஒரே மாதத்தில் அனிருத்தின் அடுத்தடுத்த 4 அதிரடி: 3 படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இவரது அப்பா ரவி ராகவேந்தர் நடிகர் ரஜினிகாந்தின் மச்சான். இருந்தபோதிலும் அனிருத்தின் இசை பிரவேசம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின்மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷின் டான்சும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் பாடலை எழுதி பாடவும் செய்திருந்தார் தனுஷ். இந்தப் பாடலின்மூலம்தான் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகும் போக்கு துவங்கியது. இந்த நடைமுறை தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்தப் படம் அனிருத்தின் இசை சாம்ராஜ்யத்திற்கு சிறப்பான பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து, ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கின் ஜவான் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ரிவியூ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய இசைப்பயணத்தில் மிகவும் சிறப்பான காலகட்டத்தில் தற்போது அனிருத் உள்ளார்.

நேற்றைய ரஜினியின் என்ட்ரி சாங்கான ஹுக்கும் பாடல் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் காவாலா வெளியாகி பட்டையை கிளப்பியது. அதிகமான வியூஸ்களையும் பெற்றது. இதனிடையே ஜவான் படத்தின் ப்ரிவியூ, லியோ படத்தின் நா ரெடி போன்றவையும் கடந்த ஒரே மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Music composer Anirudhs next to next songs within a month makes fans thrilling

இந்தப் படங்களில் இந்திய அளவில் பிரபலமான பான் இந்தியா ஸ்டார்களான, விஜய், ரஜினி, ஷாருக்கான் போன்றவர்களின் படங்களில் இருந்து பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் எல்லாம் அனிருத்தான் இசையமைத்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டில் கமலின் விக்ரம் படத்திலும் இவரது பாடல்கள் மற்றும் பிஜிஎம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. முன்னதாக ரஜினியின் பேட்ட மற்றும் தர்பார் படங்களிலும் ரஜினிக்காக அனிருத் கொடுத்திருந்த என்ட்ரி சாங் பட்டையை கிளப்பின.

Music composer Anirudhs next to next songs within a month makes fans thrilling

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X