இந்த முறை நியூக்ளியர் பாம்தான்.. தளபதி 67 குறித்து உற்சாகத்தில் துள்ளி குதித்த அனிருத்!
ஐதராபாத் : நடிகர் விஜய்யின் தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இதுகுறித்து அவர் தனது வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தளபதி 67 படம்
நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நாட்கணக்கில் மாதக்கணக்கில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குநர் உள்ளிட்டவர்வர்களும் காத்திருந்தனர். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே படம் குறித்த அப்டேட்களை தான் கூற முடியும் என்று தொடர்ந்து தெரிவித்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மீண்டும் ட்விட்டரில் இணைந்த லோகேஷ்
முன்னதாக ட்விட்டர் பக்கத்திலிருந்து சில மாதங்கள் விலகியிருந்த லோகேஷ் கனகராஜ், நேற்றைய தினம் மீண்டும் இணைந்ததுடன், முதல் பதிவாக, தளபதி 67 படத்தின் அறிவிப்பை மேற்கொண்டார். தொடர்ந்து விஜய்யுடன் தான் மல்லுக்கட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தளபதி 67 பட அறிவிப்பு
முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் படம் குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்தே தன்னுடைய அறிவிப்பை லோகேஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் படத்தொகுப்பு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அடுத்த அறிவிப்பு
படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் படம் குறித்த மற்றொரு அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

நியூக்ளியர் வெடி என அனிருத் மகிழ்ச்சி
இதனிடையே படத்தின் இசையமைப்பாளராக இணைந்துள்ள அனிருத் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் இடையிலான பிளாஸ்ட் மீண்டும் துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முறை இந்த வெடி நியூக்ளியர் வெடியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











