Anirudh: அலப்பறைய கிளப்பியாச்சு.. ஜெயிலர் வசூல் குறித்து அனிருத் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களின் அதிகமான வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படம் கடந்த ஒரே வாரத்தில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 375 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அறிவித்துள்ளது.

Music composer Aniruth hails Jailer movie collection shared by Sun pictures

ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து அனிருத் உற்சாகம்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. படத்தில் சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியானது.

இதையொட்டி ஒவ்வொரு மொழியிலிருந்து முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருந்தனர். இதனால் படத்தின் மாஸ் மேலும் அதிகரித்தது. சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொருவரும் படத்தில் ரஜினிக்கு உதவிய நிலையில், மகனான வசந்த் ரவியின் நடவடிக்கை படத்தின் பலமாக காணப்பட்டது. விநாயகனின் மிரட்டலான நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா என மூன்று நாயகிகள் படத்தின் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களின் பாராட்டிற்கும் உரியதாக ஜெயிலர் படம் அமைந்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ள இந்தப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்த ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படம் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் கவனத்தை பெற்றுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோவாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக காவாலா பாடல் தமன்னா, ரஜினி ஆட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை பெற்று அதிரடி சரவெடியாக அமைந்துள்ளது. படத்தின் ரிலீசின்போது அலப்பறையை கிளப்புறோம் என்று அனிருத் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்த சன் பிக்சர்ஸ் அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அனிருத், அலப்பறையை கிளப்பிட்டோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X