twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லோகேஷின் மாஸ்டர் -விக்ரம் வித்தியாசம் சொன்ன அனிருத்... என்னன்னு பாருங்க!

    |

    சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது விக்ரம் படம். கமல்ஹாசனின் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவரது இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை, ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    Music composer Aniruth tells difference between Master and Vikram movie

    உலக நாயகன் 4 ஆண்டுகளுக்கு பின் நடித்து வரும் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது விக்ரம் படம். முன்னதாக விக்ரம் என்ற பெயரில் கமலின் படமே ரிலீசாகியுள்ள நிலையில், அந்த வெற்றிப் படத்தின் டைட்டிலைக் கொண்டு இந்தப் படம் ரிலீசாக உள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் மிரட்டலாக அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் பத்தல பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் எனர்ஜியுடன் கூடிய கமல்ஹாசனை மீண்டும் நமக்கெல்லாம் காட்டியுள்ளது. அவரது எனர்ஜியுடன் கூடிய நடிப்பை இந்தப் படத்தில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடிப்பு என்று வந்துவிட்டால் தன்னுடைய பெஸ்ட்டை கொடுக்கும் அவர் உலகநாயகன் என்ற பட்டத்திற்கு மிகவும் ஆப்டானவர் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

    பான் இந்தியன் படமாம்...கமல் சார், அந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க...சிம்பு எதை சொல்றாரு? பான் இந்தியன் படமாம்...கமல் சார், அந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க...சிம்பு எதை சொல்றாரு?

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டிலும் ரசிகர்கள் இதே உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களை உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது. விஜய் சேதுபதி பேசும்போது மேள தாளத்துடன் அவர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதேபோல ஒவ்வொருவருக்கும் அவர்கள் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து கொடுத்து இறுதிவரை இந்த மகிழ்ச்சியை தொடர்ந்தனர். இதனால் இந்த இசை வெளியீடு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சியில் பல பாடல்களை சிறப்பாக கொடுத்தார் இசையமைப்பாளர் அனிருத். மேடையில் அனிருத் இசையமைக்க யார் யார் சிவம் பாடலை பாடினார் கமல்ஹாசன். இந்த பாடலுக்கு கூட்டத்தில் ஆரவாரம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அனிருத், பத்தல பாடலின் தெலுங்கு பாடல்வரிகளை பார்த்த கமல்ஹாசன், அது தவறாக இருந்ததை பார்த்து உடனடியாக திருத்திக் கொடுத்ததாக குறிப்பிட்டார்.

    Recommended Video

    விடியலை யார் பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்!... Surya இருக்காரா? | Filmibeat Tamil

    தொடர்ந்து பேசிய அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களின் வித்தியாசம் குறித்து பேசினார். மாஸ்டர் படம் 50 சதவிகிதம் லோகேஷ் கனகராஜின் படமாக இருந்த நிலையில் கமலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த விக்ரம் படம் 100 சதவிகிதம் லோகேஷின் படமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Aniruth tells difference between Lokesh's Master and Vikram movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X