twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 வருடங்களாக எனக்கு மணிரத்னம் தான் பாஸ்.. பாராட்டிய ஏஆர் ரஹ்மான்!

    |

    சென்னை : நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று.

    இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்தப்படம் தற்போது செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன்..தமிழரின் பெருமை.. நடிகை த்ரிஷா பெருமிதம் !பொன்னியின் செல்வன்..தமிழரின் பெருமை.. நடிகை த்ரிஷா பெருமிதம் !

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பிரபலமான பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது. தன்னுடைய 40 ஆண்டுகால தவம் இந்தப் படம் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ்

    செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ்

    இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் பிரமோஷனை படக்குழு துவக்கியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி

    டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி


    இதில் படத்தின் நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். உடல்நலக்குறைவு காரணமாக படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் கலந்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

    பழமையான சோழர் காலத்து இசை

    பழமையான சோழர் காலத்து இசை

    இதற்கான சோழர் காலத்து இசைக்கருவிகளை ஆய்வு செய்து பாலியில் போய் இந்தக் கருவிகளை சேகரித்து அதை வைத்து அவர் படத்திற்கான இசையை கொடுத்துள்ளார். இதற்கான தன்னுடைய டீம் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது குறித்து அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதனால் இது எல்லோருடைய படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மணிரத்னம் தான் பாஸ்

    மணிரத்னம் தான் பாஸ்

    இந்நிலையில் நேற்றைய டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான், 30 வருடங்களாக இயக்குநர் மணிரத்னம் சார் தனது பாஸாக இருந்து வருகிறார் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவருவது குறித்து தான் அவரிடம்தான் கற்றுக் கொண்டதாகவும் ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

    அடுத்தடுத்த படங்கள்

    அடுத்தடுத்த படங்கள்

    ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்தடுத்த படங்கள் கோலிவுட்டில் வெளியாக உள்ளன. அவரது இசையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. வருடத்திற்கு ஒரு படம் என தமிழ் ரசிகர்களை ஏமாற்றி வந்த ஏஆர் ரஹ்மான் தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    English summary
    AR Rahman hails director Manirathnam and says he is the Boss to Him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X