Director Ravikumar: அயலான் வொர்க்கை பார்த்து குஷியான ஏஆர் ரஹ்மான்.. ரவிக்குமார் பெருமிதம்!
சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளது அயலான் படம். இந்தப்படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் செய்து வருகின்றனர். முன்னதாக படத்தின் இசை வெளியீடும் பிரம்மாண்டமான அளவில் செய்யப்பட்டது.
இன்றைய தினம் படத்தின் டிரெயிலர் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலான் படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தற்போது டிரெயிலரும் வெளியாகவுள்ளது. மறுபுறம் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டவர்களும் படத்தின் பிரமோஷனையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையும் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அவருடைய முந்தைய படங்களான டாக்டர், டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை என்றாலும் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாகவே மாறியுள்ளது. படத்தில் அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் என கலர்புல் காம்பினேஷன் அமைந்திருந்தது.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது எஸ்கே 21 படத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே பொங்கல் ரிலீசாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
அயலான் படம்: கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்தது அயலான். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தில் ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 85 நாட்களில் நிறைவுற்றதாகவும் ஆனால் படத்தின் சிஜி வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்டதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போது நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின சிஜி வேலைகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் தரத்தில் VFX: இந்திய அளவில் சிறப்பான VFX பணிகளை நம்மவர்கள் அதிகமாக செய்து வருவதாகவும் ஹாலிவுட் படங்களிலும் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் நம்முடைய படங்களில் அதை செயல்படுத்துவதற்கு பட்ஜெட் முக்கியமான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய பட்ஜெட்டிற்குள் அதை செய்யும்போது அதற்கான தரத்தைதான் நாம் பெற முடிவதாகவும் அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டால் நிரப்ப முடியாத இடத்தை சரியான திட்டமிடல் மூலம் செய்ய வேண்டியதாக இருப்பதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஏஆர் ரஹ்மான் பாராட்டு: இதனிடையே இந்தப் படத்தின் வேலைகளை பார்த்து படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் தரத்தை உயர்த்தும் நிலையில் அதற்கேற்ப விஷுவலையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின்மீது நம்பிக்கை வைத்து ஏஆர் ரஹ்மான் கமிட்டான நிலையில் அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு ஏற்பட்டதாகவும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











