இனிமே இப்படித்தான்.. அடுத்த 10 நாளைக்கு ஏஆர் ரஹ்மான் என்ன செய்யப் போறாரு தெரியுமா?

மும்பை : இசைப்புயல் என்று அனைவராலும் பாராட்டிற்கு உள்ளாகி கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்பான இசையமைப்பாளராக உள்ளார் ஏஆர் ரஹ்மான்.

கடந்த 1992ல் தமிழில் வெளியான ரோஜா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழில் பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்த படங்கள் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன.

ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர் ரஹ்மான்

ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர் ரஹ்மான்

தன்னுடைய இளம் வயதிலேயே சிறப்பான இசையை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஏஆர் ரஹ்மான். தமிழ், மலையாளத்தில் குழு இசையமைப்பாளராக இருந்த சேகர் என்பவரின் மகனான ஏஆர் ரஹ்மான், சிறு வயதிலேயே இசை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

ரோஜா படத்தில் அறிமுகம்

ரோஜா படத்தில் அறிமுகம்

தொடர்ந்து இளையராஜா, எம்எஸ்வி இசைக்குழுக்களில் பணியாற்றியுள்ளார். பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவர் பின்னாளில் ஸ்காலர்ஷிப் பெற்று லண்டன் இசைப்பள்ளியில் முறையாக இசையை கற்றுத் தேர்ந்தார். விளம்பர படங்களுக்கு ட்யூன் போட்டுக் கொண்டிந்த இவருக்கு மணிரத்னம் தனது ரோஜா படத்தின்மூலம் சிறப்பான வாய்ப்பை அமைத்துத் தந்தார்.

ப்ரெஷ்ஷான இசை

ப்ரெஷ்ஷான இசை

அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, படிப்படியாக தன்னுடைய சிறப்பான மற்றும் ப்ரெஷ்ஷான இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த இசைப்புயலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதன்மூலம் தமிழை ஆஸ்கார் மேடை வரை கொண்டு சென்று எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று முழங்கினார்.

ஏஆர் ரஹ்மானின் அடுத்தடுத்த படங்கள்

ஏஆர் ரஹ்மானின் அடுத்தடுத்த படங்கள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏஆர் ரஹ்மான் தமிழில் தற்போது 5 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார். இவரது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு மற்றும் சர்தார் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் தன்னுடைய 30 ஆண்டுகால இசைப்பயணத்தை மேலும் சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் ஏஆர் ரஹ்மானை ஆக்டிவாக பார்க்க முடிகிறது. அவ்வப்போது தன்னுடைய குடும்ப நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள் குறித்த பல அப்டேட்களை இவர் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய உணவு குறித்து இவர் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Ponniyin Selvan புத்தகத்தை நெஞ்சில் சுமந்து நடிச்சோம் , JayamRavi speech | PS1 Song lauch *Kollywood
ஏஆர் ரஹ்மானின் புதிய டயட்

ஏஆர் ரஹ்மானின் புதிய டயட்

அடுத்த 10 நாட்களுக்கு தான் வீகன் டயட்டைதான் பின்பற்ற உள்ளதாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இந்த டயட், தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகியுள்ளது. 50 வயதை கடந்துள்ள ஏஆர் ரஹ்மான் தற்போதுவரை இளமையான தோற்றத்திலேயே காணப்படுகிறார். இந்நிலையில் அவர் வீகன் டயட்டை பின்பற்ற உள்ளது அவரது ரசிகர்களுக்கும் உத்வேகமாக அமையும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X