AR Rahman: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது அறிவிப்பு.. அதிக நேஷனல் விருதுகளுடன் சாதனை!

சென்னை: இசைப்புயல் என அனைவராலும் பாராட்டப்படும் ஏஆர் ரஹ்மான் கடந்த 1992ம் ஆண்டில் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கியவர். முன்னதாகவும் சில ஆல்பங்களில் பணியாற்றியிருந்த இவருக்கு ரோஜா படம் மிகப்பெரிய என்ட்ரியை கொடுத்திருந்தது. தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

சமீபத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கும் இசையமைத்து அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டிற்கான இந்த விருதுகளில் ஏஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

70th National awards AR Rahman 70

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்: இசைப்புயல் என அனைவராலும் பாராட்டப்படுபவர் ஏஆர் ரஹ்மான். கடந்த 1992ம் ஆண்டில் துவங்கிய இவரது திரையுலக பயணம் தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த 30 ஆண்டு காலத்தில் அவர் ஏராளமான வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு பரிசாக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக தனுஷ் இயக்கி நடித்து ரிலீசாகியுள்ள ராயன் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏராளமான ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே இன்றைய தினம் 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது: இந்நிலையில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்திற்காக இந்த விருதை ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளார். இதையொட்டி அவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ள 7வது தேசிய விருது. கடந்த 1992ம் ஆண்டில் தன்னுடைய முதல் படமான ரோஜா படத்திற்காகவே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏஆர் ரஹ்மான் முதல் முறையாக பெற்றிருந்தார். 7வது முறையாக தேசிய விருது: இந்தப் படத்தின் பாடல்களின் பிரெஷ்னஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தேசிய விருதையும் ஏஆர் ரஹ்மானுக்கு பெற்று தந்தது. இதையடுத்து கடந்த 1997ம் ஆண்டில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மின்சார கனவு படத்தில் இசையமைத்ததற்காக 2வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏஆர் ரஹ்மான் பெற்றிருந்தார். தொடர்ந்து 2001ம் ஆண்டில் லகான் என்ற இந்தி படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருதையும் தொடர்ந்து 2002ம் ஆண்டில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார் ஏஆர் ரஹ்மான். அதிக முறை தேசிய விருதுகள் சாதனை: தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் காற்று வெளியிடை என்ற படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருதையும் தொடர்ந்து 2006ம் ஆண்டில் மாம் என்ற இந்தி படத்தில் இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்ற தேசிய விருதையும் ஏஆர் ரஹ்மான் பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இசை அமைத்ததற்காக தற்போது சிறந்த பின்னணி இசையமைப்பாளராக தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதில் ஐந்து முறை தமிழ் படங்கள் இரண்டு முறை இந்தி படங்கள் என அவர் சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 7 தேசிய விருதுகளுடன் அதிக தேசிய விருதுகள் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள் நிலையில் 5 தேசிய விருதுகளுடன் இளையராஜா 2வது இடத்தில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X